SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

துணிக்கடைக்கு வரும் பெண்களிடம் நட்பாக பழகி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது!

2022-11-24@ 17:13:54

விஜயவாடா: விருந்துக்கு வந்த பெண்களுக்கு குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுக்கப்பட்டது. அந்திராவின் விஜயவாடா மேற்கு பகுதியை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் உள்ளூரில், படமடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படமடா உயர்நிலைப் பள்ளி சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

அவர்களுக்கு விருந்து கொடுப்பதும், பரிசுகள் கொடுப்பதும் அடிக்கடி நடந்துள்ளது. இந்நிலையில், விருந்துக்கு வந்த பெண்களுக்கு குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுக்கப்பட்டது. அவர்கள் சுயநினைவின்றி இருக்கும்போது அவர்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பார்கள். அதன்பின் துணிக்கடை பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கம்.

வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் காட்டி மிரட்டி அவர்களை விபச்சாரத்திற்கு அழைத்து சென்றனர். இது பல நாட்கள் நடந்துள்ளது. இறுதியில், ஒரு பெண் துணிச்சலாக போலீசை அணுகியதில் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விஜயவாடா போலீஸ் கமிஷனரிடம் இரண்டு இளம்பெண்கள் புகார் கொடுத்துள்ளார். இதை தீவிரமாக எடுத்துக்கொண்ட போலீசார், தீவிர விசாரணை நடத்தியதில் உண்மை விஷயம் தெரிய வந்துள்ளது.

துணிக்கடை நடத்தி வந்த பெண்ணுக்கு எதிராக உள்ளூர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் அலட்சியம் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. துணிக்கடை நடத்தி வந்த பெண் தன் கடையில் வேலை செய்யும் பெண்களையும், கடைக்கு வரும் இளம் பெண்களையும் தன் வார்த்தைகளால் கவர்ந்துள்ளார். விவாகரத்து பெற்ற பெண்கள், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவிகள் மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இதன் மூலம் பார்ட்டிக்கு வரும் பெண்களுக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுக்கப்படுகிறது. இவர்களது நிர்வாண புகைப்படங்களை தனது போனில் எடுப்பது வழக்கம். அதன்பிறகு பெண்களை அழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார். ஆனால், அதை கேட்காதவர்களை இந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்