உளவுத்துறையில் 1671 பல்நோக்கு பணியாளர், செக்யூரிட்டி அசிஸ்டென்ட்கள்
2022-11-24@ 16:43:06

மத்திய அரசின் உளவுத் துறையில் காலியாக உள்ள 1671 பல்நோக்கு பணியாளர் மற்றும் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. Security Assistant/Executive: 1521 இடங்கள். சம்பளம்: ரூ.21,700-69,100. வயது: 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியோடு விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் மொழியை பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
2. Multi Tasking Staff: 150 இடங்கள். சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் அலுவல் மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 25.11.22 தேதியின்படி கணக்கிடப்படும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: ரூ.500/- (தேர்வுக் கட்டணம் ரூ.50, விண்ணப்ப கட்டணம் ரூ.450). இதை ஆன்லைனில் ஸ்டேட் வங்கி மூலம் செலுத்தவும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2022.
மேலும் செய்திகள்
பிஎஸ்என்எல்-லில் 11,705 ஜூனியர் டெலிகாம் ஆபீசர்
மீரட் ராணுவ நல வாரியத்தில் 28 இடங்கள்
தென் மத்திய ரயில்வேயில் 4103 அப்ரன்டிஸ்கள்
உத்தரகாண்ட் ராணுவ நல வாரியத்தில் பணிகள்
தேசிய நீர் மின்சார நிறுவனத்தில் 401 பயிற்சி இன்ஜினியர்கள்
ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படையில் 1448 எஸ்ஐ., கான்ஸ்டபிள்கள்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!