SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

பிஎம்வி எலக்ட்ரிக் கார்

2022-11-22@ 15:25:57

இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமன பிஎம்வி எலக்ட்ரிக், ஈஸ்-இ என்ற மினி காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் முதலாவது எலக்ட்ரிக் கார் இது. 2 பேர் மட்டுமே இதில் பயணிக்கலாம். பஜாஜ் கியூடே போன்று இது அமைந்துள்ளது. இதில் 40 வோல்ட் பேட்டரி உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 200 கி.மீ வரை செல்லலாம் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இதில் உள்ள மோட்டார், அதிகபட்சமாக 13.5 பிஎஸ் பவரையும் 50 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

அறிமுகச் சலுகையாக ஷோரூம் விலை சுமார் 4.49 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் 10,000 பேருக்கு மட்டுமே இந்த அறிமுகச் சலுகை விலை பொருந்தும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 2 சீட் கொண்ட இந்த காரில் முன்புறம் டிரைவரும், பின்புறம் ஒருவரும் அமரலாம். 2.9 மீட்டர் நீளம் கொண்டது. சீட் பெல்ட், ஏர்பேக், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளன.

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்