SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடரும் சாதனை

2022-11-22@ 00:31:38

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் மாநில அளவிலான இரண்டாவது ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழகத்தில் அனைத்து குடும்பத்தினருக்கும் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, ‘பட்டினியின்மை’ எனும் இலக்கு எய்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்தது.

2022 நவம்பர் முதல் மூன்று முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், மருத்துவ குழுக்கள் மூலம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது,’’என்றார். ஊட்டச்சத்து குறைபாட்டால், நாட்டில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகளிடம் நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க ஒன்றிய அரசு பெரிதாக அக்கறை காட்டவில்லை. இவ்விஷயத்தில் பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்தால், எவ்வித பயனும் கிடைக்காது என்பதை ஒன்றிய அரசு அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் ஆரோக்கியம் சார்ந்த சமுதாயம் உருவாக்குவதில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம். ஊட்டச்சத்து குறைபாட்டால், பாதிக்கப்படும் குழந்தைகள் கல்வியிலும், ஆரோக்கியம் உள்ளிட்ட விஷயங்களில் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை முற்றிலும் ஒழிக்க முடியும். தமிழக அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திட்டங்கள் அறிவிப்பதோடு, கடமை முடிந்து விட்டதாக ஒன்றிய அரசு நினைக்கிறது. அறிவிக்கும் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் தான் மக்கள் பயன் அடைவார்கள் என்பதை முதலில் ஒன்றிய அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுமக்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களுக்கு தமிழக அரசு அதீத முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. உண்மையில் இது வரவேற்க வேண்டிய விஷயம். வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆரோக்கியமான சமுதாயம் தேவை. குறுகிய காலத்தில் மருத்துவ துறையில் பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட ஒவ்வொரு திட்டமும் சிறப்பு வாய்ந்தவை. இத்திட்டங்களால் ஏராளமான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

மக்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்தலாம், அந்தளவுக்கு சிறப்பு வாய்ந்த திட்டங்களாகும். நகர் பகுதிகளுக்கு கொடுக்கப்படும், அதே முக்கியத்துவம் கிராமப்புறங்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. அறிவிக்கப்படும் திட்டங்கள் உடனே நடைமுறைக்கு வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தல், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குதல்,
கிராமங்களின் வளர்ச்சி என ஒவ்வொரு விஷயத்திலும் தமிழக அரசு தொடர் சாதனை படைத்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்