இலங்கைக்கு செல்ல ராமருக்கு வழிகாட்டிய பிள்ளையார்: ஆன்மிக பக்தர்களின் மனதை கவரும் சேதுரஸ்தா சாலை
2022-11-07@ 17:17:56

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது வேதாரண்யம். பல்வேறு சிறப்புகளும், ஆன்மீக பெருமைகளும் பெற்றது. சுதந்திர போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் உப்பு சத்தியாகிரகத்தில் காந்திஜியின் தண்டி யாத்திரை அளவுக்கு நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற தடையை மீறி உப்பு அள்ளும் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாகும்.....
ஆங்கிலேய அரசால் உப்புக்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து நடத்தப்பட்ட இந்த உப்பு சத்தியாகிரக போராட்டம் 1930ம் ஆண்டு ஏப். 30ல் நடைபெற்றது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்த போராட்டத்தை நினைவுகூறும் விதமாக ஆண்டு தோறும் நினைவுநாள் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத்தகைய பெருமைகள் வாய்ந்த வேதாரண்யத்திற்கு மேலும் ஒரு பெருமை சேர்த்து இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளும், ஆன்மீக பக்தர்களும் தேடி செல்லும் இடம்தான் ராமர் பாதம்.
வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 3வது கிலோமீட்டரில் இருக்கிறது ராமர் பாதம். சீதாதேவியை ராவணன் கடத்திக்கொண்டு சென்று விட்டான் என்று ராமருக்கு தெரிய வருகிறது. தனது மனைவி சீதாவை மீட்டு கொண்டு வர வேதாரண்யம் வருகிறார். ஆனால் அங்கிருந்து இலங்கைக்கு எப்படி செல்வது என்பதை பார்ப்பதற்காக பிள்ளையாரிடம் வழி கேட்கிறார்.
அதற்கு பிள்ளையார் ‘‘தென்கிழக்காக சென்றால் ஒரு மணல்மேடு வரும். அங்கிருந்து பார்த்தால் ராவணன் கோட்டை தெரியும்’’ என்று விரல் காட்டுகிறார். ராமர் நடந்து சென்ற சாலை சேது ரஸ்தா என்றழைக்கப்படுகிறது. ராமருக்கு வழி காட்டிய பிள்ளையார், சேது ரஸ்தாவில் அமர்ந்த கோலத்தில் ஆட்காட்டி விரலை நீட்டியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ராமர் பாதம் பகுதிக்கு படிகளில் ஏறிச்சென்றால் ஏறத்தாழ இருபத்தைந்து அடி உயரத்தில் இருக்கிறது. இங்கு ஒரு மணி மண்டபம் கட்டப்பட்டு அதன் கீழ் பாறையில் ராமர் பாதம் வடிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு நின்றுதான் ராமர் இலங்கையை பார்த்துள்ளார். ராமர் பார்த்தபோது ராவணன் கோட்டையின் பின்புறம் தெரிந்துள்ளது. ஒரு வீரன் பின்புறமாக சென்று தாக்குவது வீரமாகாது என்று தெரிவித்து ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து இலங்கைக்கு சென்று ராவணன் கோட்டையின் முன்புறமாகத் தாக்கினாராம். வேதாரண்யம் வரும் சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் தவறாமல் ராமர் பாதம் அமைவிடத்திற்கு வந்து செல்கின்றனர். வரலாற்று இதிகாசங்களின் நினைவுகள் வேதாரண்யத்தை தேடி வரும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. நீங்களும் சென்றால் பார்த்துவிட்டு வாருங்களேன்.
மேலும் செய்திகள்
சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு தானியங்கி நம்பர் பிளேட் ரீடிங் கேமரா மூலம் கட்டணம் வசூல்: 6 மாதத்தில் நடைமுறைக்கு வருகிறது
‘இன்று உலக சிட்டுக்குருவி தினம்’ அழிந்து வரும் சிட்டுக்குருவியை பாதுகாக்க உறுதியேற்போம்....
நோயாளிகளை டாக்டர்கள் தொடாமலே ‘ஸ்மார்ட் நாற்காலி’ மூலம் சிகிச்சை: திருச்சி கல்லூரி மாணவன் அசத்தல்
ஒரே நாடு ஒரே கட்சியாக மாற்ற முயற்சி: அழிவுப் பாதையை நோக்கி ஜனநாயகம்.! சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் அடக்கப்படும் எதிர்ப்பு குரல்கள்
தேசிய அளவில் நடைபெற்ற துடுப்பு போடுதல் போட்டியில் அரசு பள்ளி மாணவி அசத்தல்: பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவிக்கும் மாணவர்கள்
சாலை விபத்துகளை தடுக்கும் ஆன்டி ஸ்லீப் கிளாஸ்: டிரைவர்கள் கண் மூடினால் அலாரம் அடிக்கும்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி