கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள்
2022-11-05@ 00:31:23

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டாரா? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த மாதம் 23ம் தேதி கார் வெடித்த விபத்தில் ஜமேஷா முபின் (29) பலியானார். இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர். இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜமேஷா முபின் குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு: கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தனது உடலில் உள்ள ரோமங்களை அகற்றியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது இஸ்லாமிய நாடுகளின் ஐஎஸ் சித்தாந்தத்தை பின்பற்றும் நடைமுறை. எனவே, அவர் தற்கொலைப்படை தாக்குதலை நடத்த திட்டமிட்டு சதி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், முபினின் மனைவி நஸ்ரத் வீட்டில் இருந்த 2 பெட்டிகள் குறித்து கேட்டபோது, அது பழைய துணிகள் என முபின் தெரிவித்துள்ளார். அந்த 2 பெட்டிகளிலும் வெடிபொருட்கள் இருந்ததை முபின் மறைத்துள்ளார். காது கேளாத மற்றும் பேச்சு திறன் குறைபாடுள்ள நஸ்ரத், தனது சகோதரி நிலோபர் நிஷாவின் உதவியோடு, தனது கணவரின் திட்டங்கள், செயல்பாடு முழுமையும் தனக்கு தெரியாது என போலீசில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
புதுகையில் விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு
மல்லிகார்ஜூனேஸ்வரர் சுவாமியை 4,560 அடி உயர பருவதமலையில் ஏறி பக்தர்கள் தரிசனம்: 23 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தனர்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 146 அடி உயருமுள்ள முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
வடலூரில் 152வது தைப்பூச திருவிழா: 7 திரை விலக்கி ஜோதி தரிசனம்; லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
தெய்வீகத்தின் சன்னிதியில் பாகுபாடு பார்க்க கூடாது: தென்முடியனூர் சம்பவம் தொடர்பாக சத்குரு ட்வீட்
பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிய ஏலகிரி மலை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!