SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.10,000 கோடி நிதி வசூலித்து மோசடி; புலன் விசாரணை தகவல்களை வெளியிட உயர் நீதிமன்றம் தடை

2022-10-08@ 01:09:06

சென்னை: வேலூர் சத்துவாச்சேரியை தலைமை இடமாக கொண்டு இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீசஸ் நிறுவனம் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல பெயர்களில் கிளைகளுடன் இயங்கியது. புகாரின்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த நிறுவனம்  ரூ.10,000 கோடிவரை முதலீடுகளை வாங்கி மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட நிதி நிறுவன ஏஜென்ட் குப்புராஜின் மனைவி பிரீத்தி, தனது கணவர் தொடர்பான செய்திகளை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இது மிகப்பெரிய மோசடி. யாரும் ஏமாற வேண்டாம் என்ற விழிப்புணர்வு் இதன் மூலம் தரப்படுகிறது. இது அரசியலமைப்புக்கு முரணானது இல்லை. அதே நேரத்தில். விசாரணை என்பது ரகசியமானது. அதில் வெற்றி பெற்றால்தான் தீர்வு கிடைக்கும். எனவே, விசாரணை அதிகாரிகள் இந்த வழக்கில் புலன் விசாரணையில் கிடைக்கும் தகவல்கள், ஆவணங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்