SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு கூடாது; ஓபிஎஸ் அறிக்கை

2022-10-08@ 00:57:44

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டி தேர்வின்றி பணியமர்த்துவது குறித்தோ அல்லது வெயிட்டேஜ் நீக்குவது குறித்தோ அரசு எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. ‘ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்’ என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டு ஓராண்டு கடந்த நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள போட்டி தேர்வினை ரத்து செய்துவிட்டு, தேர்ச்சி முப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு கனிவுடன் பரிசீலித்து, போட்டி தேர்வை ரத்து செய்யவும், தேர்ச்சி மூப்பு அடிப்படையில் அவர்களை பணியமர்த்தவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்