SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

சென்னையில் வெள்ள தடுப்பு பணி; முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் ஆய்வு

2022-10-08@ 00:54:00

சென்னை: சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் ஆய்வு செய்கிறார். தென்மேற்கு பருவமழை வருகிற 15ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை வருகிற 16ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இயல்பை விட 35 சதவீதம் முதல் 75 சதவீதம் கூடுதலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. மழையை எதிர்கொள்ள பல்வேறு அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால், வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை ஆய்வு செய்ய உள்ளார். மொத்தம் 9 பகுதிகளில் அவர் நேரில் ஆய்வு செய்கிறார். காலை 10.30 மணியளவில் அசோக் நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வை தொடங்குகிறார். தொடர்ந்து அவர் 11 மணியளவில் கொளத்தூர் வேலவன் நகர், 11.30 மணியளவில் டாக்டர் அம்பேத்கர் காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்கிறார்.

அதன் பிறகு 11.50 மணியளவில் புளியந்தோப்பு நெடுஞ்சாலையிலும், 12.10 மணியளவில் டீமலஸ் ரோட்டிலும், 12.35 மணியளவில் பேசின் பிரிட்ஜ் ஜங்சன், 12.55 மணியளவில் வால்டாக்ஸ் ரோடு, 1.10 மணியளவில் ரிப்பன் பில்டிங், 1.30 மணியளவில் என்.எஸ்.சி. போஸ் ரோடு ஆகிய பகுதிகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்கிறார். அப்போது வெள்ள தடுப்பு பணி தொடர்பாக அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்த உள்ளார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்