SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொது விநியோக திட்டத்தில் அரிசி கடத்திய 195 பேர் கைது

2022-10-08@ 00:53:24

சென்னை: பொது விநியோக திட்டத்தில் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 33  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றச்செயலில் ஈடுபட்ட 195 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை அலுவலர்கள் தொடர் ரோந்து சென்று ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 26.9.2022 முதல் 2.10.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.15,62,367 மதிப்புள்ள 2765 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 33 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 பேர் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980ன்படி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்