SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞருக்கு அறிவிப்பு

2022-10-07@ 16:05:53

2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி என்பவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் உரிமைக்காக போராடியதற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 2 அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், கௌரவமாகவும் அமைதிக்கான நோபல் பரிசு கருதப்படுகிறது. 2022ம் ஆண்டின்ற்காகன அமைதிக்கான நோபல் பரிசை நார்வேயின் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு 2 அமைப்புகள் மற்றும் ஒரு தனிநபருக்கு என 3-ஆக பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

குறிப்பாக மனித உரிமை அமைப்புகளுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி என்கிற தனி நபருக்கும் ரஷ்யாவை சேர்ந்த மனித உரிமை அமைப்பான 'MEMORIAL' என்ற அமைப்பிற்கும், உக்ரைனை சேர்ந்த மனித உரிமை அமைப்பான CENTER FOR CIVIL LIBERTIES என்ற அமைப்பிற்கும்  இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இவர்கள் பல ஆண்டுகளாக குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், அதிகார துஸ்பிரயோகத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தமைக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர போர் குற்றம், மனித உரிமை விதிமீறல்கள், அதிகார துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை மிக சிறப்பான முறையில் ஆவணப்படுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்