SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீண்டும் எல்எம்எல் ஸ்கூட்டர்கள்

2022-10-07@ 15:35:44

இந்தியச் சந்தையில் ஏற்கெனவே கொடிகட்டிப் பறந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மீண்டும் இந்தியச் சந்தையில் கால்பதிக்கத் தொடங்கி விட்டன. அந்த வரிசையில், மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விற்பனையில் ஈடுபட்டு வந்த எல்எம்எல் நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியச் சந்தையில் இருந்து வெளியேறியது. தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது.   

மூன்ஷாட் மோட்டார் சைக்கிள், ஸ்டார் ஸ்கூட்டர் மற்றும் ஓரியான் பைக் என்ற 3 டூவீலர்கள் அறிமுகமாக உள்ளன. இவற்றில் மூன்ஷாட் எலெக்ட்ரிக் பைக் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கற்பனை செய்து பார்க்க இயலாத அளவு வேகத்தில் அதாவது, நொடிப்பொழுதில் பூஜ்யத்தில் இருந்து 70 கி.மீ வேகத்தை எட்டும் என கூறப்படுகிறது. இதுபோல், ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டூயல் டோன் வண்ணத்தில் வெளிவர உள்ளது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம் பெற்றிருக்கும்.

ஓரியான் எலெக்ட்ரிக் சைக்கிள், நகர சாலைகளுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் உட்பட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. மேற்கண்ட டூவீலர்கள் பற்றி முழுமையான விவரங்கள் வெளியிடப்படவில்லை. இவை அடுத்த ஆண்டில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்