SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசுக்கும், பணியாளர்களுக்கும் இடையிலான நல்லுறவை கெடுக்க முயற்சி: தலைமை செயலக சங்கம் கண்டனம்

2022-10-07@ 00:51:34

சென்னை: தமிழ்நாடு தலைமை செயலக பணியாளர்களுக்கும், தமிழக அரசிற்கும் இடையேயான நல்லுறவை கெடுக்க சிலர் ஈடுபட்டுள்ளதாக சங்க தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தலைமை செயலக சங்கத்திற்கு கடந்த மாதம் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 4 அணிகள் களத்தில் போட்டியிட்டன. 4 அணிகளுமே எந்தவித அரசியல் சார்பில்லாது உறுப்பினர்களை சந்தித்து, நேர்மையான முறையில் தேர்தலை சந்தித்தன. 4 அணிகளும் முதன்மையாக வைத்த வாக்குறுதியானது மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதே.

இந்த தேர்தலில் தலைமை செயலக சங்க உறுப்பினர்கள் 83.5 சதவீத வாக்குப்பதிவினை செலுத்தி, தற்போதைய நிர்வாகிகளை தேர்வு செய்துள்ளனர். தலைமை செயலக சங்க தேர்தலை பொறுத்தவரையில், அரசியல் என்பதற்கு எக்காலத்திலும் எள்ளளவிற்கும் இடமில்லை. தலைமை செயலக சங்கமானது 1946ம் ஆண்டு முதல் இயங்கிவரும் பாரம்பரியம் மிக்க ஜனநாயக அமைப்பாகும். நிலைமை இவ்வாறிருக்க, உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு, தலைமை செயலக பணியாளர்களுக்கும் தமிழக அரசிற்கும் இடையேயான நல்லுறவினை கெடுக்கும் செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதனை தலைமை செயலகம் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்