SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4 போலீஸ் அதிகாரிகள் மீது வன்கொடுமை வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

2022-10-07@ 00:51:31

சென்னை: சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் தயாள் மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்திக்குடன் இணைந்து கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்து கட்ட பஞ்சாயத்து செய்து வருவதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுகுமார் என்பவர் உயரதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார். புகாரை விசாரித்த கீழ்ப்பாக்கம் சரக  முன்னாள் உதவி ஆணையர் ஹரிகுமார், வழக்கறிஞர் சுகுமார் தான் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும், சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாகவும் அறிக்கை அளித்தார்.

இதையடுத்து, வழக்கறிஞர் சுகுமாரை சரித்திர பதிவேடு குற்றவாளியாக காவல் துறையினர் அறிவித்தனர். இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தமது பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று கோரி சுகுமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், காவல் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து காவல் துறை அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நபர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்ராஜ்திலக் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்