SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.6.5 கோடி தங்கம் கையாடல் நகைக்கடை மேலாளர் சிக்கினார்

2022-10-06@ 00:44:46

கோவை: நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்யாமல் ரூ.6.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ தங்க்தை கையாடல் செய்த நகைக்கடை மேலாளரை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜூவல்லரியில் இருந்து, தமிழ்நாட்டில் உள்ள பிரபலமாய நகைக்கடைகளுக்கு தங்க நகை ஆபரணங்கள் தயாரித்து மொத்த விலையில் விற்பனை செய்யப்படும். இந்த ஜூவல்லரியில் மார்க்கெட்டிங் மேலாளராக பணியாற்றுபவர் ராஜஸ்தானை சேர்ந்த அனுமன் துவேசி. இவர், கடந்த ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 12 வரை பெங்களூரிலிருந்து நகைகளை கோவையில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்ய கொண்டு வந்திருக்கிறார்.

நகைகளை ஆர்டர்கள் தந்த கடைகளுக்கு விநியோகம் செய்யவில்லை. இதுபற்றி தனியார் ஜூவல்லரி உரிமையாளர் சக்னால் காட்ரி கோவை வெரைட்டிஹால் போலீசில் புகார் அளித்தார். அதில் மொத்தம் 13.5 கிலோ எடையுள்ள ரூ.6.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கையாடல் செய்ததாக கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து அனுமன் துவேசியை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து நகைகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்நிலையில், கடையின் முன்னாள் ஊழியர் தல்பத் சிங் என்ற நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்