SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

குட்கா புகழ் மாஜி அமைச்சரை டம்மியாக்க சேலம் விவிஐபி முடிவு செய்திருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-10-06@ 00:43:27

‘‘குட்கா புகழ் மாஜி அமைச்சரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கழற்றி விட சேலம் விவிஐபி திடீரென முடிவு செய்துள்ளாராமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மன்னர் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் மாஜி குட்கா புகழ் அமைச்சர், சமீபத்தில் தாமரை கட்சியின் தேசிய தலைவரை திடீரென நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரம் சேலத்துக்காரருக்கு ஷாக் கொடுக்கும் விஷயமாக மாறியது. தான் இருந்தபோது தன்னிடம் கலந்தாலோசிக்காமல் தாமரை தேசிய தலைவருடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சேலம் விவிஐபி கோபித்து கொண்டாலும், மனசுக்குள் வேறு பிளானோடு உள்ளாராம்.
டெல்டா மாவட்டத்தில் தனக்கு பக்க பலமாக கடைசி வரையிலும் இருப்பார் என நம்பி இருந்த குட்கா புகழ் அமைச்சரும் கூட, நமக்கு தெரியாமலேயே சில வேலைகள் வேலை பார்த்து வருவதால் அவர் மீது சேலம் விவிஐபி உச்சகட்ட கோபத்தில் இருந்து வருகிறாராம். டெல்டா மாவட்டத்தில் சந்தேக லிஸ்டில் உள்ள 3 மாஜி அமைச்சர்களுக்கு அடுத்தபடியாக 4வதாக குட்கா புகழ் அமைச்சரும் சேர்க்கப்பட்டுள்ளாராம். எனவே, அவரின் மாவட்ட பதவியை பிடுங்கி தனக்கு விஸ்வாசமான நிர்வாகிக்கு கொடுக்க ஆயத்தமாகி உள்ளாராம் சேலம்காரர். அதற்கான முயற்சியில் சேலத்துக்காரர் இறங்கி ஆளையும் தேர்வு செய்துவிட்டார் என்று மன்னர் மாவட்டத்தில் சேலத்துக்காரர் அணியில் உள்ளவர்களுக்குள் அரசல் புரசலாக பேச்சு ஓடுகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேன் மாவட்டத்துல என்ன விசேஷம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஹனி பீ மாவட்டத்தின் பிக் குளத்து இலைக்கட்சி நகர செயலாளராக உள்ளவர், தோழிக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய காலத்திலிருந்தே தேனிக்காரருடன் உடனிருக்கிறார். தேனிக்காரர் அதிகாரத்தில் இருந்தபோது தமிழகம் முழுவதும் பரவலாக கான்ட்ராக்ட் எடுத்து சம்பாதித்தார். இதற்காகத்தான் நகர செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஆட்சி அதிகாரம் பறிபோன நிலையில், தற்போது தேனிக்காரரிடம் பட்டும் படாமல் தொடர்பில் இருந்து வருகிறார். இவரின் தம்பி சமீபத்தில் ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். அவரை சந்தித்து வாழ்த்திய போட்டோக்கள் வலைத்தளங்களில் வைரலாகின. நகர செயலாளர்தான் தன்னோட தம்பியை அனுப்பி வச்சுருக்காருன்னு சேதியும் பரவ ஆரம்பித்தது. இது தேனிக்காரரை செம டென்ஷனாக்கி இருக்காம். வாழ்த்து சொல்லத்தான் அனுப்பினேன். மற்றபடி உங்களிடமிருந்து பிரிய மாட்டேன் என நகர செயலாளர் நேரில் சென்று கூறியும், தேனிக்காரர் நம்பவில்லையாம். இதனால் கட்சி மாற அண்ணன் - தம்பி இருவரும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பிக் குளத்து இலைக்கட்சியின் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போலி டாக்டர்கள் தொல்லை தாங்க முடியல என்று பொதுமக்கள் அலறுகிறார்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடி தாலுகா பொன்னான ஆறு கொண்ட ஊரின் சுற்றுப்புற பகுதிகளில் இருக்குற கிராமங்கள்ல விவசாயம் மற்றும் கூலி தொழிலாளர்கள் அதிகளவில் இருக்குறாங்க. அவங்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல் நிலை பாதிப்புகளுக்கு பெரும்பாலும் அப்பகுதிகள்ல இருக்குற சிறிய, சிறிய தனியார் மருத்துவமனைகளுக்கு போறாங்களாம். அந்த டாக்டர்கள் கிட்ட சிகிச்சைக்கு போனா, உடனடியாக காய்ச்சல் சரியாகிடுதாம். ஆனால் வேறு வகையான உடல் உபாதைகள் ஏற்படுதாம். காரணம் சிகிச்சை அளிக்குறவங்க போலி டாக்டராம். மருத்துவம் படிக்காமலேயே சிகிச்சை அளிக்குறாங்களாம். அதனாலத்தான் பக்க விளைவுகள் வருதுன்னு பப்ளிக் புகார் சொல்றாங்க. இதனால, பப்ளிக் கடும் இன்னலுக்கு ஆளாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாம்... இது குறித்து சமூக ஆர்வலர்கள் புகாரை தட்ட வேண்டிய துறைக்கு தட்டி விட்டு இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அல்வா மாவட்டத்துல குக்கர் கட்சி காலி போல இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அல்வா மாவட்டத்துல குக்கர் கட்சியில் இருந்து வெளியேறிய மாஜிக்கள், ஒரு ஐம்பது பேரு சேலத்துக்காரர பார்த்து இலைக்கட்சியில் சேர்ந்தாங்க. அவர்களை அதற்காக அமைக்கப்பட்ட மேடையில் ஏற்றி, குரூப் போட்டோ எடுத்த மாஜி மாங்கனியார், எல்லோருக்கும் வாழ்த்துக்கள் என்றாராம். ஆனா பாருங்க... யாருமே மாஜியை புகழ்ந்து ஒரு வாழ்த்துக்கோஷம் கூட போடலையாம். இதனால மாங்கனியார் முகத்துல புத்துணர்ச்சியே இல்லையாம். ‘ஏங்க எங்க தலைவரு எவ்வளவு பெரிய ஆளு, அவரை புகழ்ந்து பெயருக்கு கூட ஒருகோஷம் போடலன்னா என்ன அரசியல் பண்றீங்கன்னு? செமையா ஒரு கேள்விய, மாங்கனியாரின் அடிப்பொடிகள் கேட்டிருக்காங்களாம். ஆனா அதுக்கு பதில் சொன்ன அல்வா நகரத்து ஆளுங்க, மம்மிக்கு மட்டும் தான் கோஷம் போடுவோம். வேறு யாருக்கும் போடமாட்டோமுன்னு கறாரா சொல்லிட்டாங்களாம். அட வந்தவங்க சின்ன மம்மியின் ஒற்று உறவினர்களாக இருப்பாங்களோ என்று நினைத்து, சேலம்காரரிடம் கட்சி உறுப்பினர் அட்டை மட்டும் இப்போதைக்கு கொடுங்க, பொறுப்பு தராதீங்க என்று காதில் கிசுகிசுத்ததாக கேள்வி...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்