SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

சுனாமிக்கும் அசையாத டச்சு பீரங்கி கொடி மரம்

2022-10-05@ 14:06:33

* கடல் காற்று சுவாசிக்க கடல் அழகு ரசிக்க நல்ல சுற்றுலா தலம்

நாகப்பட்டினத்தில் டச்சுக்காராகள் காலத்தில் கட்டப்பட்டு நூற்றாண்டுகள் பல கடந்து சாட்சி பொருளாக இன்றுவரை டச்சு பீரங்கி கொடி மரம் மேடை பூங்கா உள்ளது. நாகப்பட்டினத்தில் டச்சுக்காரர்களின் குறிப்பிடதக்க நினைவு சின்னங்களில் பீரங்கி கொடி மரம் மேடையும் ஒன்றாகும். நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து சிறு தொலைவிலும் துறைமுகத்தின் மீன் இறங்கு தளம் அருகில் இந்த கொடிமரம் பூங்கா அமைந்துள்ளது. ஆழ்கடல் சென்ற படகுகள் கரையை அறிந்து கொள்ள தற்பொழுது கலங்கரை விளக்கம் பயன்படுகிறது. ஆனால் பண்டைய காலத்தில் கலங்கரை விளக்கமாக விளங்கியது இந்த டச்சுகொடி மரம் ஆகும்....

டச்சுக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து கடல் வாணிபத்திற்காக நாகப்பட்டினம் நோக்கி வரும் படகுகள் மற்றும் கப்பல்களுக்கு கரையை காட்டி குறிப்புகளைத் தர கலங்கரை விளக்கத்தை போன்று நாகப்பட்டினம் கடலோரத்தில் கொடி மர மேடை ஒன்று டச்சுகாரர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 20அடி உயரமும் வடக்கு தெற்காக கிழக்கு புறத்தில் 113 அடி நீளமும், மேற்கு புறத்தில் 110அடி நீளமும், கிழக்கு மேற்காக வடபுறத்தில் 123 அடி அகலமும் தென்புறத்தில் 123 அடி அகலமும் கொண்ட மேல் தளத்தை கொண்டுள்ளது.

இந்த மேடையின் மேல் தளத்தில் 3அடி உயரத்தில் 40 அடி விட்டம் கொண்ட வட்ட வடிவ மேடையில் கொடி மரம் உள்ளது. இந்த கொடி மரம் மேடையில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பீரங்கி போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. டச்சுக்காராக்காரர்கள் காலத்தில் கடல் வழி பயணத்திற்கு உறு துணையாக டச்சு கொடி மரம் மேடை இருந்தது. நாகப்பட்டினத்தில் இன்று கலங்கரை விளக்கம் அமையந்துள்ளது என்றால் இதற்கு முன்னோடியாக டச்சு கொடி மரம் இருந்தது தான். இந்த டச்சு கொடி மரத்தை வைத்து தான் ஏராளமான வணிக கப்பல்கள் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்து வாணிபம் செய்து சென்றது.

ஆனால் நாடு சுதந்திரமடைந்த பிறகு கொடி மரம் மேடை நாகப்பட்டினம் நகராட்சியின் கட்டுபாட்டில் பொது பூங்காகவாக மாற்றம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா வாசிகளும் வரலாற்று ஆர்வலர்களும், உள்ளுர் பொதுமக்களும் கடல் அழகினை கண்டு ரசிப்பதற்கும் கடற் காற்றை அனுபவிக்க ஏதுவாக சிறந்த சுற்றுலா தலமாகவும் பொழுது போக்கு இடமாகவும் விளங்கியது இந்த பூங்கா.

சுனாமியால் நாகப்பட்டினம் மாவட்டமே சின்னாபின்னம் அடைந்த பொழுது கடலோரத்தில் உள்ள இந்த கொடி மரம் மேடையின் ஒரு செங்கல் கூட பாதிப்படையாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. நூற்றாண்டுகள் பல கடந்து சாட்சி பொருளாக இன்று வரை இருக்கும் கொடி மரம் பூங்கா. சுனாமியால் நாகப்பட்டினம் மாவட்டமே சின்னாபின்னம் அடைந்த பொழுது கடலோரத்தில் உள்ள இந்த கொடி மரம் மேடையின் ஒரு செங்கல் கூட பாதிப்படையாமல் இருந்தது.

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்