SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புல்லட்சாமியால் பவர்புல் பெண்மணியின் பிளான் புஸ்வாணம் ஆன கதையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-10-04@ 02:40:44

‘‘தெர்மகோலை பார்த்ததும் ஏன் இலை கட்சியின் மாஜி அமைச்சர்கள் இரண்டு பேர் ஓட்டம் எடுத்தார்களாம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரில் தெர்மாகோல், உதயம், செல்லம் என 3 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இவங்க மூன்று பேருக்கும் ஏழாம் பொருத்தமாம். இருந்தாலும் நான் வருவதால் மூன்று பேரும் இணைந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒருவரை ஒருவர் மனசுக்குள் பழிவாங்குவதை எல்லாம் வேண்டாம் என்று சேலம் விவிஐபி அட்வைஸ் செய்தாராம். அதன்படி, தூங்கா நகர் பொதுக்கூட்டத்திற்கு ஆட்களை திரட்டி வருவதற்கான செலவு மற்றும் மேடை, பேனர் உள்ளிட்ட பொதுச்செலவு அனைத்தையும், மூவரும் பகிர்ந்து கொள்ள சம்மதித்தார்களாம். இதனை நம்பி நகர பொறுப்பாளரான தெர்மகோல் பலருக்கும் பெருமளவில் அட்வான்ஸ் பணத்தை வாரி இறைத்தாராம். கடைசி நேரத்துல மாவட்ட செயலாளர்களான உதயம், செல்லம் ஆகியோர் செலவே செய்யாமல் ஒதுங்கிட்டாங்களாம்.

மற்றவர்கள் பணம் பதுக்குவதை லேட்டாக உணர்ந்து உஷாரான தெர்மகோல் கடைசி நேரத்தில் செலவிடுவதை குறைத்துக் கொண்டாராம். இதனால், மீட்டிங்கிற்கு எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லையாம். கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட பெண்களும் 3 மணி நேரம் எங்கள் கால்ஷீட் என்று கூறி அங்கிருந்து எஸ்கேப் ஆகிட்டாங்களாம். பொதுக்கூட்டத்தில் சேலம் விவிஐபி பேச துவங்கியபோது, பலரும் எழுந்து சென்றதால் எரிச்சல் அடைந்தார். இதனால் பதற்றமடைந்த மும்மூர்த்திகள் ‘உட்காருங்கம்மா’ என சொல்லியும் யாரும் கண்டு கொள்ளவில்லையாம். இது பிரச்னையில்லை. கூட்டம் முடிந்ததும் செலவு செஞ்ச பணத்தை, தெர்மகோலால் இரண்டு மாவட்ட செயலாளர்களிடம் அவர்கள் தர வேண்டிய பணத்தை கொஞ்சமாவது கொடுங்கன்னு கேட்டுள்ளார். ஷேர் கேட்பார் என்று பயந்துபோன இரண்டு மாவட்ட செயலாளர்களான உதயம், செல்லம் ஆகியோரிடம் தற்போதைக்கு அவர் கண்ணில் படாமல் எஸ்கேப் ஆகிட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஓட்டு கணக்கு போட்டு பவர்புல் பெண்மணிக்கு வேட்டு வைத்த புல்லட்சாமி பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள மின்துறை தனியார் மயம் மற்றும் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை என்பது புல்லட்சாமிக்கு  சுத்தமாக பிடிக்கவில்லையாம். இருப்பினும் அமைச்சரவை கூட்டிய புல்லட்சாமி ரங்கசாமியிடம் கவர்னர் உத்தரவை அமல்படுத்தினால் ஓட்டு வாங்க முடியாது. கவர்னர் கூறுவதை செயல்படுத்தக்கூடாது என அமைச்சர்கள் கருத்து சொன்னாங்களாம். உடனடியாக தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்தி தனியார் மயம் ஆகாது என புல்லட்சாமி உறுதி அளித்தாராம். தொழிற்சங்க நிர்வாகிகளிடம் நீங்கள் உடனடியாக பணிக்கு திரும்புங்கள் என புல்லட்சாமி அன்பு வேண்டுகோள் விடுத்தாராம். அப்புறம் பவர்புல் பெண்மணியின் டெல்லி முதலாளிகளின் குணாதிசியங்களை சொன்னாராம்.

இதனை யோசித்து பார்த்த தொழிற்சங்கவாதிகள் புல்லட்சாமி பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, போராட்டத்தை கைவிட முடிவு செய்தார்களாம். இதனால் போராட்டத்தை கைவிட்டு மின் ஊழியர்களும் பணிக்கு திரும்பினர். இதை பார்த்த கட்சி நிர்வாகிகள் எங்கள் தலைவரின் அரசியல் காய் நகர்த்தல் முன்பு, பவர்புல் பெண்மணியின் செயல் எல்லாம் எடுபடாது என்று சிரித்தபடி பேசிக் கொண்டார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘விழுப்புரத்துல தாமரைக்கு என்ன பிரச்னை...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘விழுப்புரம் மாவட்டத்தில் தாமரை கட்சியின் கோஷ்டி பூசல் உச்சத்தை தொட்டுள்ளதாம். கட்சிக்கு வந்த புது வரவுகளை ஓரம் கட்ட பழைய நிர்வாகிகள் வேகமாக செயல்படுகிறார்களாம். அதன்படி திராவிட கட்சியிலிருந்து, கோயம்பேடு கட்சிக்கு சென்று கடைசியில் தாமரை கட்சியில் ஐக்கியமான மாஜி எம்எல்ஏவை ஓரம்கட்ட பல வேலைகள் நடந்து வருகிறதாம். அவர் பிறந்த நாளன்று விழுப்புரத்தில் தன் வீட்டில் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தாராம்.

இதனையறிந்த, அக்கட்சியின் மாவட்ட மூத்த நிர்வாகிகள், மற்ற அணி நிர்வாகிகள், ஓபிசி அணி தலைவர் மதுரையில் இருந்து விழுப்புரம் வழியாக செல்லவே அவரை அழைத்து மற்றொரு பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்தார்களாம். ஒரே நேரத்தில், ஒரே கட்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரஸ் மீட்டால் பத்திரிகையாளர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தார்களாம். தாமரை கட்சியில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள பல சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் பிரஸ்மீட் கொடுத்து பப்ளிசிட்டியை வெளிப்படுத்தி வருகிறார்களாம். எல்லோரும் தலைவராகி விட்டதால், தாமரைக் கட்சிக்கு தலைவர் யார் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் தாமரை கட்சியில் கோஷ்டி பூசல் உச்சத்தை தொட்டுள்ளதால் அவர்களுக்குள்ளாகவே முட்டிக் மோதிக்கொண்டு அடிதடி வரை கட்சி நிலை சென்றுகொண்டிருக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஜன்னலை திறந்தாலே அதிகாரிக்கு பணமழையாமே, அது எந்த ஊர் ஜன்னலு...’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பட்டுக்கு பெயர் போன மாவட்டத்தை சேர்ந்த, மீன்போன்ற விழிகளை கொண்டவர் என பெயரில் அழைக்கப்படும் பெண், குயின்பேட்டை மாவட்டம், கலவையான ஊர்ல சார்பதிவாளராக பணியாற்றி வர்றார். இவரு இங்கு பணிக்கு வந்த நாள் முதல் அலுவலகத்துல புரோக்கர்கள் நடமாட்டம் தலைதூக்கிவிட்டதாம். இவரு தென்றல் காத்து வாக்குவதாக கூறி, பக்கத்துல இருக்குற ஜன்னலை எப்போதும் திறந்தே வைத்திருப்பாராம். அந்த ஜன்னலுக்கு அருகிலேயே ஆவண எழுத்தர்கள் என்ற போர்வையில் புரோக்கர்கள் காத்திருக்கிறார்களாம். புரோக்கர்களுக்கு ெகாடுக்க வேண்டியதை கொடுக்காம பத்திரப்பதிவுக்கு வருபவர்களிடம், முக்கிய ஆவணம் இல்லை அப்படி இப்படின்று சொல்லி அனுப்பிவிடுவாராம்.

இதை கவனித்து கொண்டிருக்கும் புரோக்கர்கள் சம்பந்தப்பட்டவரை அணுகி நான் பத்திரம் பதிவு செய்து கொடுகிறேன்னு பேரம் பேசி வசூல் பண்ணிடுவாங்களாம். இதுல குறிப்பிட்ட தொகையை ஜன்னல் வழியாக சார்பதிவாளருக்கு கொடுத்துவிடுவார்களாம். அந்த அலுவலகத்துல ஜன்னல் வழியா தென்றல் காற்றுடன், பணமழையும் கொட்டுவதுதான் பரபரப்பான பேச்சா போயிட்டு இருக்கு. இதுக்கு யாராவது முற்றுப்புள்ளி வைப்பாங்களான்னு மக்களின் கோரிக்கை அலுவலகத்துல சத்தமா ஒலிக்குது...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

 • kolathur-chennai

  சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

 • china-factory-fire-22

  சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்