SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போதை ஒழிப்பு

2022-10-04@ 00:08:47

குஜராத் மாநிலம் சூரத் நகரில் ரூ.90 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் அடிக்கடி சிக்கி வந்த நிலையில், தற்போது கள்ள நோட்டுகள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் போதை பொருட்கள் அதிகளவில் ஏன் சிக்குகிறது என்பது குறித்து தெளிவான விவரங்களை அம்மாநில அரசு வெளியிட வேண்டும். முக்கியமாக, தொடர் கதையாக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இவ்விஷயத்தில் ஒன்றிய அரசு கூடுதல் கவனம் செலுத்தி போதை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம்.

குஜராத் மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கோடிக்கணக்கில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. அம்மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும், போதை பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக குறைக்க முடியவில்லை. எங்கிருந்து குஜராத்திற்கு போதை பொருட்கள் கொண்டு வரப்படுகிறது என்ற தகவலை மாநில அரசு வெளியிட வேண்டும். குறிப்பாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு முன்கூட்டியே தகவல் கிடைக்காமல் இருப்பது ஏன்? குஜராத், மும்பையில் போதை பொருள் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு அக்கறை காட்ட வேண்டும். அப்போது தான் நாட்டில் போதை பொருட்கள் விற்பனையை குறைக்க முடியும்.

இளைய சமுதாயத்தை சீரழிக்கும் போதை பொருளை ஒழிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு அதீத தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம். இளைஞர்கள் போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கினால், கல்வியில் கவனம் செலுத்த முடியாது. இதனால் அறிவியல் முன்னேற்றத்தில் சிக்கல் ஏற்படும். தொழில்நுட்ப வசதியிலும் பின்னடைவை சந்திக்க வேண்டியிருக்கும். சமுதாயத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அறிவுக்கூர்மையான திறமை இருந்தும், இளைஞர்கள் போதையில் சிக்கினால், அதை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படும். முக்கியமாக, நாட்டின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு போதை பொருட்கள் மிகப்பெரிய தடையாக இருந்து வருகிறது. இதை ஒன்றிய அரசு அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் எல்லையில் கண்காணிப்பு வளையத்தை தாண்டி, பல கோடி மதிப்பிலான போதை பொருட்கள் எப்படி குஜராத்திற்கு வருகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. போதை பொருட்கள் ஒழிப்பு விஷயத்தில் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் ஒன்றிய அரசு செயல்பட்டு, போதை பொருள் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க, புதுவகையான நடவடிக்கைகளை குஜராத் அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
 குஜராத் மாநிலத்தில் பல கோடி மதிப்பிலான போதை பொருட்கள் சிக்கி வந்த நிலையில், தற்போது கோடிக்கணக்கில் கள்ள நோட்டும் சிக்கியுள்ளது. நாட்டில் எந்த மாநிலத்தில் கோடிக்கணக்கில் போதை பொருட்கள் சிக்கியது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், ஒன்றிய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் நலன் கருதி இனியாவது போதைப் பொருள் ஒழிப்பில், ஒன்றிய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்