புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்..
2022-10-03@ 19:07:22

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி, மின் துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்றே பணிக்கு திரும்புவதாக ஊழியர்கள் முதல்வர் ரங்கசாமியிடம் உறுதியளித்தனர் இதனையடுத்து 6 நாட்களாக தீவிரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்ததுள்ளது.
புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் பழுது நீக்குதல், கட்டணம் வசூல், மின்அளவீடு செய்தல் போன்ற அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதை கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும், தடைகளை ஏற்படுத்தியும் பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மின்துறை ஊழியர்களின் போராட்டத்தால் மின்வெட்டு ஏற்படுமானால் ஒன்றிய அரசின் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் எஸ்மா கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் நேற்று கைது செய்து நள்ளிரவில் விடுவித்தனர். இந்த நிலையில், மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே, மின்துறை ஊழியர்கள் முதல்-மந்திரி ரங்கசாமியை சந்திக்க சட்டபேரவைக்கு வந்தனர். இதனால் அமைச்சரவை கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மின்துறை ஊழியர்களுடன் முதல்-மந்திரி ரங்கசாமி மற்றும் மின்துறை அமைச்சர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது மின்துறை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்-மந்திரி ரங்கசாமி உறுதியளித்துள்ளார். இதனையடுத்து, கடந்த 6-நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
மேலும் செய்திகள்
காமெடி நடிகர் கோவை குணா மறைவு
பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு விசைத்தறி முதலாளிகளுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்தை
பூந்தமல்லியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தடை செய்யப்பட்டவைகளுக்கு பதிலாக மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள்: மாவட்ட கலெக்டர் தகவல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!