SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் நடவடிக்கை-ஆலோசனை கூட்டத்தில் எச்சரிக்கை

2022-10-03@ 12:57:38

வேலூர் : நடுரோட்டில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது, விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்டோ டிரைவர்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாகாயம் முதல் பள்ளிக்குப்பம் வரை 58 ஆட்டோ ஸ்டேண்டுகள் உள்ளது. இதன்கீழ் 1500 ஆட்டோக்கள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்தை சீர்படுத்தும் வகையிலும், ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தும் வகையில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் போக்குவரத்து காவல் நிலையத்தில் நேற்று நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வரவேற்றார் கூட்டத்திற்கு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுகிறீர்கள். இவ்வாறு விதி மீறுவதை தவிர்க்க அபராதம் விதித்தாலும் சிரமம் கொள்கிறீர்கள். போக்குவரத்து விதிகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். விதிகளை மீறினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.மது குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டினால் கண்டிப்பாக விடமாட்டோம். வெளியூர் ஆட்டோக்கள் கொண்டு வந்து ஓட்டினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். மரியாதை குறைவாக நடக்ககூடாது. ஆட்டோக்களை நடுரோட்டில் நிறுத்தி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் பாவத்திற்கு நீங்கள் ஆளாக வேண்டாம்.

உங்களை நீங்களே திருத்திக்கொள்ள வேண்டும். நாங்கள் அறிவுரை கூற வேண்டியதில்லை. உங்களில் சிலர் நேர்மையாகவும், சிறப்பாகவும் நடந்து கொள்கிறீர்கள். சிலர் அதனை கண்டுகொள்ளாமல் தங்களது இஷ்டப்படி நடந்துகொள்கின்றனர். அதனை தவிர்க்க வேண்டும். உங்களின் குறைகள் ஏதேனும் இருந்தால் அதனை நிவர்த்தி செய்வோம். எனவே நீங்கள் போக்குவரத்தை முறைப்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

  • newyork-blizzard

    நியூயார்க்கில் பனிப்புயல் வீசுவதால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்