SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

2022-10-03@ 12:41:45

சென்னை: காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.  கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் காலாண்டு விடுமுறை மாணவர்களுக்கு விடப்பட்டுள்ளது.  

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும்,  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 13-ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக சில தனியார் பள்ளிகள் மீது புகார் இருந்துள்ளது.  

தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்,  இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வருவதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு புகார் வந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.  அதில் காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும்,  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் மாவட்ட கல்வி அலுவலகங்களில் அனுமதி பெற்று சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம்.  ஆனால் முழு நாளாக அந்த வகுப்புகள் நடைபெற கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்