SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடன் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் பெண்ணை கொன்று மாமனார், மருமகள் கைது‌: குன்னூரில் பயங்கரம்

2022-10-03@ 02:44:48

குன்னூர்:  நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை அடுத்த கக்கன் நகரை சேர்ந்தவர் மோசஸ் மனோகரன். டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜோதிமணி (36). தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மோசஸ் மனோகரின் பக்கத்து வீட்டில் வசித்தவர் மணி. இவரின் மருமகள் எஸ்தர். இவர்களுக்கு கடன் தொல்லை இருந்தது. அதை அடைக்க முடியாமல் அவதிப்பட்டனர். இந்நிலையில் வீட்டிலிருந்த ஜோதிமணியை அருகில் உள்ள இடத்திற்கு அழைத்து சென்ற மணியும், எஸ்தரும் நேற்று முன்தினம் இரவு பணம் கடன் கேட்டனர். அதற்கு கணவர் வந்தவுடன் கேட்டு பணம் தருவதாக ஜோதிமணி கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த மணியும், எஸ்தரும் ஜோதிமணியை தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த பின், அவரது கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்தனர். வெளியில் தெரியாமல் மறைக்க, அருகே உள்ள பாழடைந்த வீட்டில் வைத்து சடலத்தின் மீது பெட்டி வைத்து மூடி விட்டு எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில், வெளியில் சென்ற மனைவி ஜோதிமணி நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால் அவரை மோசஸ் மனோகரன் பல இடங்களில் தேடினார். பாழடைந்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு ஜோதிமணி சடலமாக கிடந்ததை கண்டு கத்தி கூச்சலிட்டார்.

தகவலறிந்து குன்னூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கடன் கேட்டதால் பணம் கொடுக்காத ஆத்திரத்தில் ஜோதிமணி கழுத்தை துணியால் நெரித்து கொன்று சடலத்தை பாழடைந்த வீட்டில் மறைத்து வைத்து நாடகமாடியதை மணியும், எஸ்தரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்