SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாஜி இலை அமைச்சரை கண்காணிக்க அரசியல் ஒற்றர்களை களமிறக்கி உள்ள சேலம் விவிஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-10-03@ 02:37:33

‘‘சிவத்தின் ஆவேசத்தை கண்டு, புல்லட் இன்ஜின் ஆப் ஆனதை பற்றிச் ெசால்லுங்க கேட்போம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரை ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ மற்றும் தாமரை எம்எல்ஏவும் புல்லட்சாமியின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர். சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தி எதிர்ப்புகளை தெரிவித்ததோடு, ஒரு படி மேலே போய் சாமியை மாற்றிவிட்டு வேறு ஒருவரை நியமிக்க வேண்டுமென அதிரடி காட்டினாங்க. இதனால் ஆவேசமடைந்த சாமியின் எம்எல்ஏக்கள் சபையின் ஹீரோவை அவரது அறையில் சந்தித்து, சாமி மீது சேற்றை வாரி வீசும் வகையில அவதூறு பரப்புவதா. தாமரை எம்எல்ஏக்களை கண்டிக்க கூடாதா. நாங்களும் பதிலுக்கு செய்தால் என்ன ஆகும்னு யோசித்து பார்த்தீங்களா என்று கேட்டாங்களாம். அப்போது அங்கு அமைதியாக இருந்த சிவமயமானவர், அதன்பின்னர் ஆவேசம் காட்டினாராம். எதிர்கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு கார் கொடுத்து சாமி ஊக்குவிக்கலாமா. எல்லா தொகுதியில் பாரபட்சம் காட்டாமல்தான் வேலை நடக்கிறதா.

உங்களுக்கு மட்டும் சரியாக நடக்கிறது. வேண்டியதெல்லாம் கிடைக்கிறது. ஆனால் எங்களுக்கு எதுவும் நடக்கவில்லையென்று கேட்டால், சாமி மீது அவதூறு பரப்புவதாக சொல்லுவீங்களா. தேர்தலின்போது தாமரைக்கு கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றி ெகாடுத்துட்டீங்களா என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் வைத்தாராம் சிவம். இதை கேட்ட புல்லட் சாமி தரப்பினர் ஒட்டுமொத்தமாக சைலன்ட் மோடுக்கு போயிட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நடமாடும் பிசினஸ் ெசய்யும் அரசு அதிகாரிகள் தமிழகத்துல இருக்காங்களா என்ன...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தான ஊரில் கிராமங்கள் தொடர்பான துறையில செல்வமான உதவி நிலைல அதிகாரி ஒருவர் இருக்கிறாரு. இவர் எப்போதுமே அலுவலக பணிக்கு வருவது இல்லையாம். அதுக்குப்பதில் உடல் பலத்துக்கு உதவும் பன்னாட்டு கம்பெனி ஒன்றின் ஆயுர்வேத ஆரோக்கிய பவுடரை விற்பனை செய்வதில் தீவிரம் காட்டுகிறாராம்.

இவரிடம் மாவட்ட உச்ச அதிகாரி முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை அந்த பவுடரை வாங்கும் வாடிக்கையாளர்களாக உள்ளார்களாம். அதோடு அந்த அதிகாரி ஆரோக்கிய பவுடரை விற்பதற்காக தனது பதவி செல்வாக்கை பயன்படுத்துகிறாராம். இதற்காக பக்கத்துல இருக்கிற அதியமான் மாவட்டம், கிரியான மாவட்டம், மாம்பழ மாவட்டம்னு ஒப்பந்த அடிப்படையில் அரசு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் வாடகை காரை பயன்படுத்திக் கொள்கிறாராம். இதற்கான வாடகை அரசு பயன்பாட்டின் பேரில் அரசின் கருவூலத்தில் இருந்து வழங்கப்படுகிறதாம். யாராவது ஏன் ஆபீசுக்கே வர்றதில்லை என்று கேட்டால், எனக்கு இந்த பிசினஸ்தான் முதல்ல. அதுக்கப்புறம்தான் அரசு வேலைனு சொல்றாராம். அரசு வாடகை காரை பயன்படுத்துகிறீர்களே என்று கேட்டால், என்னை யார் கேட்பது. உச்ச அதிகாரியே என்னை எதுவும் கேட்பதில்லை என்று அவர் பெயரை பயன்படுத்துகிறாராம்.

இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான் மிஸ்டர் பத்தான ஊரில் அந்த துறையில உள்ளவங்க மத்தியில் முணுமுணுப்பா ஓடுதாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தூங்கா நகர மாவட்டத்துல கிடைத்த வரவேற்புல சேலம் விவிஐபி உற்சாகத்துல இருந்தாலும், உள்ளுக்குள் நடுக்கமாமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்தில் கொடுக்கப்பட்ட வெல்கம் சேலம் விவிஐபியை ரொம்பவே இம்ப்ரஸ் செஞ்சிருச்சாம். இந்த மகிழ்ச்சியோட நள்ளிரவு சொந்த ஊரு திரும்பியிருக்காரு. தன்னை சந்திக்க வந்த மாங்கனி மாநகர நிர்வாகிகளிடம் உணர்ச்சி பொங்க மகிழ்ச்சியை பகிர்ந்துக்கிட்டாராம். அந்த இன்பம் சற்றுநேரம் கூட தங்கலையாம். பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த தடை விதிச்சி டெல்லி கோர்ட் உத்தரவு போட்டுருச்சாம். இதனால ரொம்பவே ஷாக்காயிட்டாராம். யாராவது வந்து தனக்கு ஆறுதல் சொல்வாங்கன்னு பார்த்தா கட்சி முக்கியஸ்தர்கள் யாருமே வரலயாம்.

தனிமை ரொம்பவே அவரை வாட்டிருச்சாம். ஆனா அவரது எதிர்கோஷ்டியினர் ரொம்பவே உற்சாகமாயிட்டாங்களாம். 2250 அபிடவிட் தாக்கல் செய்தபோதும் கூட தேர்தல் ஆணையமும் கண்டுக்கல. சட்டமன்றத்துல நாயகர் கூட ஒண்ணும் சொல்லல. கொடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாறிடிச்சு. ரூ.4800 கோடி டெண்டர் வழக்கு சர்ச்சை வேற கிளம்பியிருக்கு. இப்படி அடுக்கடுக்கா வந்துக்கிட்டிருந்தா எப்படித்தான் தூக்கம் வருமுன்னு இப்போ தேனியின் அடிப்பொடிகள் உற்சாகமாக இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘நாகை மாவட்ட இலை கட்சியினர் மீது சேலம் விவிஐபி ஏன் கோபத்தில் இருக்கிறார்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தேனிக்காரர்  மற்றும் சேலம் விவிஐபி தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு  வர்றாங்க. டெல்டாவில், ேசலம் விவிஐபியின் ஆதரவாளர்களான முன்னாள்  அமைச்சர்கள் தேனிக்காரர் குறித்து பெரிய அளவில் விமர்சனம் செய்யாமல்  இருந்து வர்றாங்க. .

இது சேலம் விவிஐபிக்கு பிடிக்கவில்லையாம்.  மேலும், தேனிக்காரர் குறித்து விமர்சனம், எதிராக அறிக்கைகள் விடாமல் உள்ள, மாஜி அமைச்சர்கள் மீது  சேலம் விவிஐபிக்காரர்கள் ஒரு ‘கண்’ வைத்துள்ளாராம். இதையறிந்து கொண்ட சில மாஜி அமைச்சர்கள்  பெயரளவுக்கு தேனிக்காரரை விமர்ச்சித்து வர்றாங்களாம்.  ஆனால், கடலோர  மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் முன்னாள் அமைச்சர், தேனிக்காரர் குறித்து விமர்சிப்பதே இல்லையாம். இதனால் சேலம் விவிஐபியின் ஆதரவு நிர்வாகிகள்  புலம்பறாங்களாம். மாஜி அமைச்சர் தேனிக்காரர் குறித்து விமர்சனம் செய்யாமலும், எதிராக அறிக்கை விடாமலும் ஏன் இருக்கிறார் என்பதை அறிய சேலத்தில் இருந்து உளவு படை ஒன்றை இறக்கி இருக்கிறார்களாம். அவர்கள் மாஜி அமைச்சரின் மூவ்மென்ட்டை தொடர்ந்து கண்காணித்து வர்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-corona-26

  தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

 • ragul-priyanka-25

  நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

 • ukrain-dark

  இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

 • kolathur-chennai

  சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

 • china-factory-fire-22

  சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்