SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உக்ரைன் வீரர்கள் முன்னேறுவதால் ஆளில்லா விமானம் மூலம் ரஷ்யா தீவிர தாக்குதல்

2022-10-03@ 02:36:25

கீவ்: உக்ரைன் ராணுவம் லைமன் நகரை மீட்டதைத் தொடர்ந்து, ரஷ்யா மீண்டும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 7 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இதில் ரஷ்ய படைகள் கெர்சன், டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், உள்ளிட்ட உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றின. இவற்றை இணைக்கும் அரசாணையில் அதிபர் புடின் கடந்த சில தினங்களுக்கு முன் கையெழுத்திட்டார். அதே போல், ரஷ்யாவின் பிடியில் இருந்த மரியுபோல் உள்ளிட்ட தொழில், துறைமுக நகரங்களை உக்ரைன் ராணுவம் மீட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் லைமன் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றின.

இந்நிலையில், இதனை மீட்க உக்ரைன் ராணுவத்தினர் சுற்றி வளைத்ததால் அங்கிருந்து ரஷ்யப் படைகள் பின் வாங்கின. இதையடுத்து பதிலடி தாக்குதல் தொடுத்த உக்ரைன் ராணுவம் லைமன் நகரை ரஷ்ய படையிடம் இருந்து மீட்டுள்ளது. இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோ பதிவில், ``லைமன் முழுவதும் மீட்கப்பட்டது. ராணுவத்துக்கும் வீரர்களுக்கும் நன்றி,’’ என்று கூறியுள்ளார். இதன் காரணமாக, ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல்களை தற்போது அதிகரித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிக் நகரில் வெடிமருந்துகள் நிரப்பிய ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்யா ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியதாக நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாண ஆளுநர் வலன்டின் ரெஜ்னிசென்கோ கூறினார்.

*போப் வேண்டுகோள்
ரோம் நகரில் புனித பீட்டர் சதுக்கத்தில் மத வழிபாட்டிற்காக கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய போப் பிரான்சிஸ், உக்ரைனில் நிகழும் வன்முறை மற்றும் மரண சூழலை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கேட்டுக் கொள்கிறேன். அணு ஆயுத யுத்தம் ஆபத்தானது. அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்வர வேண்டும்,’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

* ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஸ் டிரோன்களின் மூலம் ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை ஜெர்மனி வழங்க உள்ளது.

* செச்சினியா மாகாணத் தலைவர் கதிரோவ், குறைந்த பாதிப்பு கொண்ட அணு ஆயுதத்தை உக்ரைனில் பயன்படுத்துவதை ரஷ்யா பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்