வெளிநாட்டு சதி தொடர்பான ஆடியோ இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை: பாக். அமைச்சரவை ஒப்புதல்
2022-10-03@ 02:26:00

இஸ்லாமாபாத்: வெளிநாட்டு சதி தொடர்பான ஆடியோ வெளியான விவகாரத்தில் இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது அலுவலக அறையில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் பேசிய ரகசிய பேச்சுகள், ஆடியோவாக சமீபத்தில் வெளியாகி அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வைரலானதை தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் விலக வேண்டும் என்று இம்ரான் கானும், இதர எதிர்கட்சி தலைவர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர்கள் உமர், ஷா மஹ்மூத் குரேஷி மற்றும் அசாம் ஆகியோர், கட்சியின் தலைவரான இம்ரான் கானுடன் அமெரிக்க சைபர்கிரைம் பற்றி பேசுவது தொடர்பாக 2 ஆடியோக்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான், அமெரிக்கா அதிகாரிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, வெளிநாட்டு சதி என கூறப்படும் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் இருந்து போப்பாண்டவர் இன்று டிஸ்சார்ஜ்
டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கு வரலாற்றில் இருண்ட நாள்: நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி கடும் கண்டனம்
அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சராக இந்திய வம்சாவளி தேர்வு
போட்டியின்றி தேர்வு உலக வங்கி தலைவராக அஜய் பங்கா
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!