SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிடிவி.தினகரன் கடும் தாக்கு வீட்டுக்கு போலீஸ் வந்தாலே இபிஎஸ் பயந்து விடுவார்

2022-10-03@ 01:35:05

தஞ்சாவூர்: வீட்டுக்கு போலீஸ் வந்தாலே இபிஎஸ்  பயந்து விடுவார், அவர் ஒரு தொடை நடுங்கி என்று தஞ்சாவூரில் டிடிவி. தினகரன் கூறினார். தஞ்சாவூரில்   மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு  அவர்களது படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ஓ.பன்னீர்செல்வம்  கருத்தும் எனது கருத்தும் ஒன்றாக தான் உள்ளது. நான், சசிகலா,  ஓ.பன்னீர்செல்வம் நேரம் வரும் போது ஒன்றிணைவதில் தவறு இல்லையே? ஏன்  எடப்பாடி பழனிசாமி கூட நேரம் வரும்போது எங்களிடம் இணையலாம்.   

சசிகலா  சிறையில் இருக்கும் போது அப்போதைய அ.தி.மு.க. அமைச்சர்கள் அவரை  பார்க்க சென்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. ஏன் என்று  கேட்டதற்கு. ஒரு லோக் ஆயுத்தா பிரச்னை  இருக்கிறது. நான் வந்தால் என்னை  சிறையில் போட்டு விடுவார்கள் என கூறினார். அவர் வீட்டுக்கு போலீஸ் சென்றாலே  பயந்து விடுவார். அவர் ஒரு தொடை நடுங்கி. நீங்கள் தவறான ஆளை முதலமைச்சர்  பதவியில் அமர வைத்துள்ளீர்கள் என சசிகலாவிடம் ஏற்கனவே நான் கூறினேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்