SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைக் மீது லாரி மோதி விபத்து அண்ணன் கண்ணெதிரே தங்கை உடல் நசுங்கி பலி

2022-10-02@ 03:17:21

குன்றத்தூர்:  மாங்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன் கண்ணெதிரே தங்கை உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் மரியம் ஜோசப் வின்ஸ்டன் (65). இவர், சென்னை, ஜாபர்கான்பேட்டையில் வசிக்கும் தனது தங்கை ரோஸ்லின் பிரமிளா (55) என்பவரை நேற்று தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார். வண்டி கெருகம்பாக்கம் பிரதான சாலையில் வந்தபோது, இவர்களது வாகனத்தை முந்திச்செல்ல முயன்ற லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக வின்ஸ்டன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில், 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, லாரியின் பின் சக்கரம் ரோஸ்லின் மீது ஏறி இறங்கியது.

இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வின்ஸ்டன் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்த ரோஸ்லின் உடலை மீட்டு, அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் ராஜேஷ் (34) என்பவரை  கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்