ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்: எஸ்டிபிஐ மாநில செயற்குழுவில் வலியுறுத்தல்
2022-10-02@ 02:20:59

சென்னை: சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, எஸ்.எம்.ரஃபீக் அகமது, பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், அகமது நவவி, நிஜாம் முகைதீன், அமைப்பு பொதுச்செயலாளர் நஸூருத்தின், பொருளாளர் அமீர் ஹம்சா, செயலாளர்கள் ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஜனநாயக அமைப்புகளின் மீது நெருக்கடி கொடுத்து தடை நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய பாஜ அரசின் நடவடிக்கை அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியின் ஒரு பகுதியாகும். இத்தகைய ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை காவேரி மருத்துவமனையில் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு?: சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் தகவல்
தமிழகத்தில் நடப்பாண்டில் ரூ.1,406 கோடியில் 150 கி.மீ., சாலை பணிகள் விரிவாக்கம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தில் பொதுமக்கள் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு
லட்சக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச்செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி