SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.945 கோடி வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.345 கோடி அதிகம்

2022-10-02@ 02:03:59

சென்னை: சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.945 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  கடந்த ஆண்டை விட ரூ.345 கோடி கூடுதலாக வரி வசூலாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிட மற்றும் நில உரிமையாளர்களிடம் சொத்து வரியும், தொழில் மற்றும் வணிகம் சார்ந்து இயங்கும் கட்டிடங்களில் தொழில் வரியும், தொழில் உரிமம் வரியும் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் 2022-23ம் நிதியாண்டின் முதல் அரையாண்டு ஆகஸ்ட் 30ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. சென்னை மாநகராட்சியின் வருவாயை உயர்த்தவும், நீண்டகால நிலுவையில் உள்ள வரியை வசூலிக்க வேண்டும் எனவும் மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.

இதனடிப்படையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் நிலுவை வரி மற்றும் நடப்பாண்டு வரியை வசூலிக்க அதிகாரிகள் தீவிரம் காண்பித்தனர். அதன்பேரில், இந்த முதல் அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி  வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், உரிய காலத்தில் வரியை செலுத்துபவர்களுக்கு  சலுகைகளையும் மாநகராட்சி அளித்தது. இதன் காரணமாக கடந்த நிதியாண்டின் மொத்த வரி வருவாய்க்கு நிகராக நடப்பாண்டின் முதல் அரையாண்டிலேயே வரி வசூல் ஆகியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 2021-2022  நிதியாண்டில் மொத்தமே ரூ.1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. ஆனால், தற்போது முதல் அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி வசூலாகியுள்ளது, என தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, 2022-23ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.1700 கோடி வரி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாநகராட்சியின் வருவாயை மேலும் அதிகரிக்க  பெரு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், நட்சத்திர விடுதிகள், குடியிருப்புகளின் அளவுகளை மறு மதிப்பீடு செய்து அதற்கேற்ப வரி தொகையை வரி வசூலிக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டின் வரிகளையும், நிலுவையில் உள்ள வரிகளையும் விரைந்து செலுத்த பொதுமக்கள் தாமாகவே முன்வர வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்