SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாமரையில் ஐக்கியமாக இலையின் பிடியில் இருந்து நழுவி வரும் குட்கா புகழ் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-10-02@ 01:52:01

‘‘கட்சி பணத்தை தன் பணமாக நினைத்து ஏப்பம் விட முயன்ற கட்சிக்காரர் யாரு...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கதர் கட்சியின் மாஜி தலைவர் இந்தியா முழுவதும் யாத்திரை மேற்கொண்டுள்ளார். குமரியான ஊரில் தொடக்க விழா பொதுக்கூட்டத்துக்கும், கட்சி ெதாண்டர்களை அழைத்து வருவது, வேன் வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக கதர் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் 17 லட்சம் வழங்கினாங்களாம். ஆனால் அவரோ அந்த பணத்தை நாமே வைத்து கொண்டால் யாருக்கு தெரியபோகிறது என்று கமுக்கமாக இருந்துட்டாராம். ஆனால், பணத்தை கொடுத்தவர்கள் வாகன ஓட்டிகளிடம் உங்கள் வாடகையை இவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பெயர், செல்போன் எண், வீட்டு முகவரியை தெளிவாக கொடுத்துட்டாங்களாம். இதனால, வாடகை கேட்டு வாகன ஓட்டுநர்களும், மற்றவர்களும் பிற தலைவர்களை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

இதனால் பணம் கொடுத்தவர்கள் புகார் பட்டியல் வாசிக்க... இது பற்றி மாவட்ட நிர்வாகி நான் ஊரில் இல்லை, இப்போது வந்துவிட்டேன் வேன் வாடகையை செட்டில் செய்துவிடுகிறேன் என்று கூறி சமாளித்தாரம். கட்சி பணத்தை தன் பணமாக நினைத்து சுருட்ட நினைத்ததுதான் இதற்கு காரணம் என்று கட்சி தொண்டர்கள் பேசிக் கொண்டனர்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ தாமரை தேசிய தலைவரை சந்தித்த பிறகு கழுவும் மீனில் நழுவும் மீனாக மாறிக்கொண்டிருக்கும் மாஜி இலை தலைவர் பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் மாஜி குட்கா புகழ் அமைச்சர் சமீபத்தில் தாமரை கட்சியின் தேசிய தலைவரை திடீரென்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினது எல்லோருக்கும் தெரியும். ஆலோசனைக்கு பின் மாஜி அமைச்சர் சில கோரிக்கைகள் முன் வைத்து சென்றாராம். அதன் பின்னர் மாஜி அமைச்சர், சேலத்துக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடம் பேசுவதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறாராம்.

யார் என்ன கேட்டாலும் அது ஒன்னும் இல்லப்பா என்று கூறி சைலாண்ட் ஆகிவிடுகிறாராம். தனது வீட்டுக்கோ, அலுவலகத்திற்கு வரக்கூடிய முக்கிய நிர்வாகிகளையும் நேரில் சந்திப்பதை தவித்து வருகிறாராம். மாஜி அமைச்சரின் இந்த திடீர் மாற்றம் சேலத்துக்காரர் அணிக்கு உடனடியாக தெரிய வந்ததாம். இதுபற்றி தெரிந்து கொள்ள டெல்டா மாவட்டத்தில் சேலத்துக்காரர் அணியில் உள்ள மற்ற மாஜி அமைச்சர்கள் தொடர்பு கொண்டும் இதுவரையிலும் பேச முடியாமல் தவிப்பில் உள்ளார்களாம். இந்த விவகாரம் சேலத்துக்காரருக்கு தெரிய வர, மாஜி குட்கா புகழ் அமைச்சரின் ஒவ்வொரு நடவடிக்கையை கண்காணிப்பு வளையத்துக்குள் சேலத்துக்காரர் டீம் கொண்டு வந்துள்ளாராம். பெரும் பணத்துக்கு சொந்தக்காரரான மாஜி குட்கா அமைச்சர் எங்கு செல்கிறார். யாரை ரகசியமாக சந்திக்கிறார் உள்ளிட்ட விவரங்களை கண்காணித்து தலைமைக்கு உடனுக்குடன் அப்டேட் செய்கிறதாம்.

இந்த விவகாரம் தெரிய வந்த மாஜி குட்கா புகழ் அமைச்சர் என்ன செய்வதென்று தெரியாமல் சேலத்துக்காரர் டீம் மீது கடும் டென்சனில் இருந்து வருகிறாராம்... அதற்குள் டெல்லி விவிஐபி தன்னை நேரில் அழைத்து ஒரு போட்டோவுக்கு போஸ்... இணைந்துவிட்டார் என்ற வார்த்தை சொன்னால் இலையால் தனக்கு தொல்லை இல்லை என்று நினைப்பதாக அவரது அடிபொடிகள் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தூங்கா நகர் பல்கலை முறைகேடுகள் எப்போதும் தூங்குவதே இல்லையாமே.. தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்காமே, உண்மையா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ இலைக்கட்சி ஆட்சியில் 5 வருடங்களுக்கு முன்பு பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சிசிடிவி பொருத்தும் பணிகள் சுமார் ரூ.40 லட்சம் செலவில் நடந்தது. பல்வேறு கால கட்டங்களில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விடைத்தாள் மாயம் உள்ளிட்ட பல விஷயங்களில் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தபோது, பல கேமராக்கள் வேலை செய்யாதது தெரிய வந்தது.

அப்போது இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி இலைக்கட்சிக்கு நெருக்கமான ஒருவருக்கு கொடுக்கப்பட்டதாகவும், பெயரளவில் கேமரா பொருத்தும் பணி நடைபெற்று பல லட்சத்திற்கு இலைக்கட்சியினருடன், ஆதரவு அதிகாரிகளும் கல்லா கட்டி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், இந்த கேமரா குறைபாட்டினை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். தற்போதைய துணைவேந்தர் சிசிடிவி கேமரா குறித்து ஆய்வு மேற்கொண்டதில், கேமராக்கள் அத்தனையும் வேலை செய்யாததாக, தரமற்று பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக இலைக்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட பல்கலை. அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி புகார்கள் குவிகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘விருதுநகரில் விருது தரும் செய்தியா... வில்லங்க செய்தியா... எதுவாக இருந்தாலும் சொல்லு...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மெடல் மாவட்டத்தின் பட்டாசு நகரத்தில், இலைக்கட்சி சார்பில் சேலத்துக்காரரின் பொதுக்கூட்டம் நடந்தது. இதன்படி மாஜி மந்திரிகள் துவங்கி ஒன்றியங்கள், மாவட்டங்கள் என அத்தனை பேரும் இக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும், சுற்றியும், முன்புறமும் நின்றபடி அட்டன்டன்ஸ் கொடுத்தனர். வராதவர்கள் பட்டியலையும் ஒரு குரூப் ரகசிய கணக்கெடுப்பு நடத்தியதாம். இதில், சேலத்துக்காரரின் ஆதரவாளர்களில் முக்கியமான சிலரே வரவில்லையென தெரிய வந்துள்ளது. விசாரித்ததில், தங்களுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லையென அவர்கள் கூறி உள்ளனர். மேலும், கூட்டத்திற்கு காராச்சேவுக்கு பெயர் போன ஊரின் இலைக்கட்சியின் கிழக்கு மாவட்டமான சூரியநிலாக்காரரும் வரவில்லையாம். இவர் தேனிக்காரருக்கு ஆதரவாக மாறி விட்டதாகவும், மாவட்ட மாஜி மந்திரியுடன் கருத்து வேறுபாட்டால் புறக்கணித்ததாக பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் உச்சமாக காராச்சேவுக்கு பெயர் போன ஊர் தொகுதியிலிருந்து கூட்டத்திற்கு தொண்டர்கள் வராததும் சேலம் தரப்புக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • om-mathan-kark

  சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்