சென்னை பாப்புலர் பிரண்ட் அலுவலகத்துக்கு ‘சீல்’; பெயர் பலகை அகற்றம்
2022-10-02@ 01:12:48

சென்னை: சென்னை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் யாரும் உள்ளே நுழையாதபடி பூட்டும் போடப்பட்டது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டுவதாகவும், பயிற்சி முகாம்கள் நடத்தி தீவிரவாத இயக்கங்களுக்கு ஆள் சேர்ப்பதாகவும் குற்றம்சாட்டி அந்த அமைப்புக்குச் சொந்தமான தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் ஆகிய இடங்களில் கடந்த மாதம் 22 ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் கூட்டு இயக்கங்களைச் சேர்ந்த 11 பேர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அதில் 8 பேர் புழல் சிறையிலும் மீதமுள்ள 3 பேர் மேல் டெல்லிக்கு விமானத்திலும் அழைத்து சென்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உட்பட 5 அமைப்புகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்பட தடைவிதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு சார்பிலும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தமிழ்நாட்டில் இயங்க தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு நேற்று காலை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த கட்டடத்தின் உரிமையாளர்கள் அனீஃபா மற்றும் ஜாகீர் ஹுசைன் ஆகியோரை நேரில் வரவழைத்து கட்டடத்தில் உள்ள எந்த பொருளுக்கும் சேதம் ஏற்படுத்தவில்லை என்பதை காட்டி கையொப்பம் பெற்றனர். பின்னர் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகத்தின் பெயர் பலகையை அகற்றி அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தார்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3 வது இடம்: மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் தகவல்
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநருக்கு இன்று அனுப்பி வைப்பு
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை நாடாளுமன்றம் தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை: வைகோ கண்டனம்!
உடன்குடி பணியாளர் தற்கொலை சம்பவத்தில் வழக்கு பதிவு, விஷவாயு தாக்கி உயிரிழப்பது தடுக்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!
பரத நாட்டிய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதா? தனியார் அறக்கட்டளை இயக்குநர் டிஜிபியிடம் விளக்கம்: தேசிய மகளிர் ஆணையம் புகாரால் பரபரப்பு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!