சீன செல்போன் கம்பெனி சொத்து முடக்கத்துக்கு ஓகே
2022-10-01@ 00:04:45

புதுடெல்லி: செல்போன் நிறுவனமான ஷாவ்மியின் ரூ.5,551 கோடி சொத்து முடக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சீன செல்போன் நிறுவனமான ஷாவ்மி, கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள உற்பத்தியாளர்களிடம் இருந்து முழுமையாக தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்கி விற்பனை செய்கிறது. ஷாவ்மி நிறுவனம் வருடத்திற்கு ரூ.34,000 கோடி வருமானம் ஈட்டி வருகிறது. இதன் பெரும் பகுதியை சீனாவில் உள்ள தனது குழும நிறுவனங்களுக்கு போலி நிறுவனங்களும் மூலம் அனுப்பி வந்தது தெரிய வந்தது. ஷாவ்மியின் சீன தலைமை குழுமம் அறிவுறுத்தலின்படி இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளது.
ஒப்பந்த உற்பத்தியாளர்களுக்கு ஷாவ்மி இந்தியா நிறுவனம் தொழில்நுட்ப உள்ளீடு மற்றும் மென்பொருள் தொடர்பான எந்த உதவியையும் வழங்கவில்லை. ஆனால், எந்த வகையான சேவையையும் வழங்காத மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணத்தை கைமாற்றியுள்ளது. விசாரணைக்கு பிறகு கடந்த ஏப்ரல் 29ம் தேதி ஷாவ்மியின் ரூ.5,551 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதற்கு ஒப்புதல் கோரி அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட அமைப்புக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியது. அதன்படி, ஷாவ்மியின் சொத்து முடக்கத்துக்கு அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் செய்திகள்
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
தற்கொலை எண்ணத்தை மாற்ற ராகுல் காந்திதான் காரணம்: ரம்யா உருக்கம்
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் தாக்கல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!