புழல் சிறையில் இருந்து இன்று 5 கைதிகள் விடுதலை
2022-09-30@ 17:14:32

புழல்: புழல் மத்திய சிறையில் இன்று நன்னடத்தை பேரில் 5 கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து மாவட்ட முக்கிய சிறைகளில் நன்னடத்தை பேரில் சிறைக் கைதிகள் தமிழக அரசின் உத்தரவின்பேரில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோல் சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த சனிக்கிழமை நன்னடத்தை பேரில் 2 பெண் உள்பட மொத்தம் 15 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கடந்த 28ம் தேதி 2வது கட்டமாக ஒரு பெண் உள்பட 22 கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், புழல் மத்திய சிறையில் இன்று காலை நன்னடத்தை பேரில் 5 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகள்
ஆத்தூர் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெல்மணிகள்
அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது 6 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
ஆந்திராவில் 44,392 அரசு பள்ளிகளில் 37,63,698 மணவர்களுக்கு கேழ்வரகு இனிப்பு கஞ்சி வழங்கும் திட்டம்-முதல்வர் தொடங்கி வைத்தார்
கோவையில் இளம் குற்றவாளிகள் அதிகரிப்பு-கஞ்சா, அடிதடி மோதல்களில் தொடர்பு
பொள்ளாச்சி சந்தையில் ரூ.1.70 கோடிக்கு மாடுகள் விற்பனை
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டார்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!