SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு 'மகாத்மாவைக் கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு..!!

2022-09-30@ 16:04:03

சென்னை: தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அருங்காட்சியகங்கள் துறை, காந்தி உலக மையத்துடன் இணைந்து 'மகாத்மாவைக் கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சியை அக்டோபர் 1ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  காந்தியடிகள் கைப்பட  எழுதிய கடிதம், டெலிகிராம், அவரது  நினைவில் வெளியிடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், அரிய புகைப்படங்கள் அடங்கிய சிறப்புக் கண்காட்சி அருங்காட்சியக சிறப்பு கண்காட்சிக் கூடத்தில்  அமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினையொட்டி 75 சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றிய விளக்கும் கண்காட்சியில் இடம் பெறுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் இருந்து, 153 பள்ளி மாணவர்கள் மகாத்மா காந்தியடிகள் போல வேடமணிந்து, அவரது பொன்மொழிப் பதாகைகளை ஏந்தி பங்கேற்கின்றனர்.  தேச பக்தி பாடல்களைப் பாடியும், நடன நிகழ்ச்சி மூலமும் காந்தியடிகளின் சிறப்பினை போற்றுகின்றனர்.  இந்நிகழ்ச்சியில் அரசு உயர்அலுவலர்கள், பல்துறை முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்