SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆயுதபூஜையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பொறியியல் கல்லுரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

2022-09-30@ 14:24:16

சென்னை: ஆயுதபூஜையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பொறியியல் கல்லுரிகளுக்கு 4 நாட்களுக்கு  அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை  அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனை தொடர்ந்து 4, 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளது.

இதேபோன்று, அனைத்து கல்லூரிகளும் விடுமுறை அளித்துள்ளது. சனிக்கிழமை 1-ம் தேதி அரசு விடுமுறை நாளாகும். 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிற நிலையில் அக்டோபர் 3-ம் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் அக்.3-ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் மூலம் ஆயுதபூஜை விடுறைக்கு சோந்த ஊர்களுக்கு படையெடுக்கு மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

  • london-vertical-farm-29

    நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்