SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திராவிட மாடல் ஆட்சி என்பதை தினந்தோறும் நிரூபித்து வருகிறோம்: அமைச்சர் சேகர் பாபு

2022-09-29@ 18:12:55

சென்னை: திராவிட மாடல் ஆட்சி என்பதை தினந்தோறும் நிரூபித்து வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், இது திராவிட மாடல் ஆட்சி என்பதை நாங்கள் தினந்தோறும் நிரூபித்து வருகிறோம். நேற்றைய தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ரூ.300 கோடி செலவில் திருப்பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இது தான் திராவிட மாடல். இனத்தால், மதத்தால், மொழியால் கலகத்தை உருவாக்கி பிரச்சினைகளை ஏற்படுத்துவது திராவிட மாடல் அல்ல. உண்மையான திராவிட மாடல் ஆட்சியை வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்