திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எதிர்ப்பு சக்தி ஊடுருவலா?: தேவஸ்தான அர்ச்சகர்கள் விளக்கம்
2022-09-29@ 15:08:56

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு. இவர் தேவஸ்தானம் குறித்து அவ்வப்போது சர்ச்சை கருத்து வெளியிடுவார். இதேபோன்று அண்மையில் ரமண தீட்சிதலு ட்விட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அதில், ‘ஏழுமலையான் கோயிலுக்குள் பிராமண எதிர்ப்பு சக்திகள் ஊடுருவியிருப்பதாகவும், கோயில் கொள்கைகளுடன் அர்ச்சகர் முறையையும் அவர்கள் அழிப்பதற்குள் முதல்வர் ஜெகன்மோகன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஏழுமலையான் கோயிலின் தற்போதைய தலைமை அர்ச்சகர்களான வேணுகோபால தீட்சிதர், கோவிந்தராஜு தீட்சிதர், கிருஷ்ண தீட்சிதர் மற்றும் மூத்த அர்ச்சகர் கிரண் தீட்சிதர் உள்ளிட்ட வம்ச பரம்பரை அர்ச்சகர்கள் ேநற்று கூட்டாக திருமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஏழுமலையான் கோயிலில் வைகானச ஆகம முறைப்படி நித்ய கைங்கர்யங்கள் நடந்து வருகிறது. ரமண தீட்சிதர் தனது தனிப்பட்ட கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதற்கும் வம்ச பரம்பரை அர்ச்சகர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் தெரிவிப்பது போன்று எதிர்ப்பு சக்திகள் யாரும் இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அர்ச்சகர் பணியை செய்து வருகிறோம்.
தற்போது 4 குடும்பங்களை சேர்ந்த 53 வம்ச பரம்பரை அர்ச்சகர்கள் சுவாமிக்கு கைங்கர்யம் செய்கின்றனர். ஓய்வுபெற்ற பிறகும் அர்ச்சகர்கள் சுவாமியின் பாத சேவையில் பங்கேற்க தேவஸ்தானம் வாய்ப்பு வழங்கி உள்ளது. குற்றசாட்டு தெரிவிக்கும் ரமண தீட்சிதருக்கும், மாதத்திற்கு ஒருமுறை ஏழுமலையான் பாத சேவை செய்ய வாய்ப்பளித்து அதற்கான கவுரவ தொகையாக மாதம் ரூ.85 ஆயிரம் தரப்படுகிறது என தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!!
ராகுல் காந்தி தகுதிநீக்கம்; மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆலோசனை கூட்டம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மேலும் 9 பேர் உயிரிழப்பு.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்
தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னசென்ட் காலமானார்!!
எந்த தடையும் மக்களை கட்டுப்படுத்தாது பாகிஸ்தானை சீரமைக்க பெரிய அறுவை சிகிச்சை தேவை: இம்ரான் கான் ஆவேசம்
பான் மசாலா,சிகரெட்கள் மீது அதிகபட்ச செஸ் வரி நிர்ணயம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி