SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தை அறிய 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்: விவசாயிகள் கோரிக்கை

2022-09-29@ 12:49:13

பழநி: யானைகளின் நடமாட்டத்தை அறிய 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கேரிக்கை விடுத்துள்ளனர். பழநி மற்றும் ஒட்டனன்சத்திரம் வனப்பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக யானைகள் நடமாட்டம் அதிகளவு இருந்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் அகழி அமைத்தல், சோலார் மின்வேலி அமைத்தல், வேட்டை தடுப்பு காவலர்களை பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இந்நிலையில் பழநி வனப்பகுதியில் தேக்கந்தோட்டம், ஆண்டிபட்டி பகுதிகளில் வனப்பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளன.

அதுபோல் யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ள ஒட்டனசத்திரம் வனப்பகுதிகுட்பட்ட சத்திரப்பட்டி வரையிலான பகுதிகளுக்கிடேயேயான 22 கிலோமீட்டர் தூர பகுதியில் நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தால் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும். சட்டப்பாறை, வரதாபட்டிணம், கோம்பைபட்டி, உள்கோம்பை ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பதன் மூலம் யானைகள் நடமாட்டம் மட்டுமின்றி, வெளியாட்கள் நடமாட்டம் போன்றவற்றையும் கண்காணிக்க முடியுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்