SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

நாடு முழுவதும் இலவச ரேஷன் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

2022-09-29@ 00:23:18

புதுடெல்லி: நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கும் திட்டத்தை, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதிலும்  ரேஷன் கடைகளின் மூலம் 5 கிலோ இலவச கோதுமை அல்லது அரிசி வழங்கும் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் தமிழத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 5 கிலோ புழுங்கல் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து வந்ததால், இத்திட்டம் 6 முறை நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, போதுமான உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளதை ஆய்வு செய்து உறுதிப்படுத்திய அரசு அதிகாரிகள், இத்திட்டம் மேலும் 3 முதல் 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சில தினங்களுக்கு முன் தெரிவித்தித்தனர். இந்நிலையில், இலவச ரேஷன் வழங்கும் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகையில், `வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிய இருந்த பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டம் வரும் டிசம்பர் 31 தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 80 கோடி பேர் பயன் அடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.44,762 கூடுதலாக செலவாகும்,’ என்று தெரிவித்தார்.

* பண்டிகை காலத்தில் உதவும்
பிரதமர் மோடி, ``இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை நீட்டிக்க அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு, இலவச அரிசி பெறும் 80 கோடி மக்கள், பண்டிகை காலத்தில் பயனடைய உதவி உள்ளது,’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்