தாலின் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் பென்சிச்
2022-09-29@ 00:02:54

தாலின்: எஸ்டோனியாவில் நடைபெறும் தாலின் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் விளையாட, சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிச் தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இங்கிலாந்தின் கேத்தி பவுல்ட்டருடன் (26 வயது, 145வது ரேங்க்) மோதிய பெலிண்டா பென்சிச் (25வயது, 14வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த பவுல்ட்டர், டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த அந்த செட்டை 7-6 (7-2) என்ற கணக்கில் வென்று சமநிலை ஏற்படுத்தினார்.
எனினும், 3வது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி பவுல்ட்டரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த பென்சிச் 6-4, 6-7 (2-7), 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 44 நிமிடம் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார். செக் குடியரசின் கரோலினா முச்சோவா, ஷுவாய் ஸாங் (சீனா), ஹடாட் மயா (பிரேசில்) ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகள்
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியீடு.! ஜடேஜாவுக்கு சம்பள உயர்வு.! புவனேஷ்குமார் பட்டியலில் இருந்து நீக்கம்
தங்கம் வென்றார் லவ்லினா போர்கோஹைன்
மகளிர் பிரிமியர் லீக் பைனல் மும்பைக்கு 132 ரன் இலக்கு
2வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அசத்தல்
மகளிர் உலக குத்துச்சண்டை நிக்கத் ஜரீன் மீண்டும் சாம்பியன்
மயாமி ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் போதபோவா: கோகோ, அசரெங்கா வெளியேற்றம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி