ஆணையருக்கு அடி உதை ஜெய்ப்பூரில் பாஜ மேயர் பதவி பறிப்பு
2022-09-28@ 00:02:53

ஜெய்ப்பூர்: முன்னாள் ஆணையர் யாக்யா மித்ரா சிங்கை தாக்கியது நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜெய்ப்பூர் மாநகராட்சியின் பாஜ மேயர் சவுமியா குர்ஜாரின் பதவியை ராஜஸ்தான் அரசு பறித்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆனால், ஜெய்ப்பூர் மாநகராட்சியின் மேயராக பாஜ.வை சேர்ந்த சவுமியா குர்ஜார் இருந்தார். இந்த அலுவலகத்தில் கடந்தாண்டு ஜூன் 4ம் தேதி மேயர் சவுமியா குர்ஜாருக்கும் அப்போதைய மாநகராட்சி ஆணையர் யாக்யா மித்ரா சிங் தியோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஆணையர் மித்ராவை சவுமியாவும், மேலும் சில பாஜ கவுன்சிலர்களும் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, மேயர் சவுமியாவையும், கவுன்சிலர்களையும் ராஜஸ்தான் அரசு சஸ்பெண்ட் செய்தது. ஜூன் 7ம் தேதி முதல் மேயர் பொறுப்பை ஷீல் தபாய் கவனித்து வந்தார். ராஜஸ்தான் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை பெற்றதால், சவுமியா மீண்டும் மேயரானார். இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட நீதி விசாரணையில், முன்னாள் ஆணையர் யாக்யா மித்ரா சிங்கை மேயர் சவுமியா தாக்கியது நிரூபிக்கப்பட்டது. இதனால், மேயர் பதவியில் இருந்து நேற்று அவரை நீக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்துள்ளது.
Tags:
Commissioner kicked Jaipur Baja Mayor post forfeiture ஆணையருக்கு அடி உதை ஜெய்ப்பூர் பாஜ மேயர் பதவி பறிப்புமேலும் செய்திகள்
முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல்
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வரின் மகள் அமலாக்கத்துறை ஆபீசில் ஆஜர்
ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 6வது நாளாக முடங்கியது
போலி ஆவணம் தாக்கல்: தனித்தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் எம்எல்ஏ பதவி ரத்து.! கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை: இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை
வங்கதேசத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 19 பேர் பலி
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!
தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!
துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!