காவல்துறையை மிரட்டும் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி
2022-09-28@ 00:02:32

கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: கோவையில் பாஜ நடத்திய ஆர்ப்பாட்டம் மூலம் கோவை அமைதியாக இருப்பதை ஆர்எஸ்எஸ், பாஜ விரும்பவில்லை என தெரிகிறது. கோவை கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக பாஜ தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும். மாநில முதல்வரை மிரட்டும் விதமாக அண்ணாமலை பேசுகின்றார். தமிழக காவல் துறையை மிரட்டுகிறார். அரசியல் கட்சி தலைவர் என்ற அடிப்படை நாகரிகம் இல்லாத வகையில் பேசுகிறார். இத்தகைய பேச்சை அனுமதிக்கக்கூடாது. தமிழக அரசு இது போல பேசுபவர்களை நடமாட அனுமதிக்கக்கூடாது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் எப்படி அனுமதி அளித்தது என தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அந்த அமைப்பினர் ஏற்கனவே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலங்களை பார்க்க வேண்டும். காந்தி ஜெயந்தியன்று ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு என்ன வேலை? இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Police threatening Annamalai arrested K. Balakrishnan interviewed காவல்துறை மிரட்டும் அண்ணாமலை கைது கே.பாலகிருஷ்ணன் பேட்டிமேலும் செய்திகள்
கலாஷேத்ராவில் பாலியல் புகார்.. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!
ஆரணி கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு அதிமுக தலைவர் பதவி பறிப்பு
அதிமுக - பாஜ கூட்டணி தொடர்கிறது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
எடப்பாடி பழனிசாமிக்கு அஜித் திடீர் வாழ்த்து: நடந்தது என்ன?
9ம் வகுப்பு வரையிலான தேர்வை விரைந்து நடத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சொல்லிட்டாங்க...
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு