மதவெறியர்களை தூண்டிவிட்டு என்னை கொல்ல சதி: நவாஸ் மகள் மீது இம்ரான் குற்றச்சாட்டு
2022-09-27@ 20:10:11

லாகூர்: மதவெறியர்களை தூண்டிவிட்டு என்னை கொல்ல சதித் திட்டம் நடப்பதாகவும், நவாஸ் மகள் இதனை செய்வதாக இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் அவரது அமைச்சரவை அதிகாரிகளுக்கு இடையேயான நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆடியோ பேச்சு லீக் ஆனதால், பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஹீம் யார்கானில் நடந்த பேரணியில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பேசுகையில், ‘அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இடையிலான பேச்சு தொடர்பான ஆடியோ வெளியானதையடுத்து, பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் மகளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) மூத்த தலைவருமான மரியம் நவாஸ், என்னைக் கொல்ல சதி செய்தார். மத வெறியர்களை தூண்டிவிட்டு வகுப்புவாதம் மற்றும் மத வெறுப்பு பிரசாரம் மூலம் கொல்ல விரும்புகிறார். இதனால் என் உயிருக்கு மதவெறியர்களால் ஆபத்து உள்ளது. ஆனால் நான் மரணத்திற்கு பயப்படவில்லை. எனது மரணம் இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது; வேறு யாராலும் தீர்மானிக்கப்படுவது இல்லை’ என்று கூறினார்.
மேலும் செய்திகள்
மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி கலைப்பு
ஆஸி. நியூசவுத்வேல்ஸ் மாகாண பொருளாளராக இந்தியர் பதவியேற்பு
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!
பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா ஊழியர்கள் 60 நாட்களில் வௌியேற வேண்டும் என்பதில் உண்மையில்லை: அமெரிக்க குடியுரிமை இயக்குநரகம் தகவல்
கனடாவில் 2வது முறையாக மகாத்மா காந்தி சிலை சேதம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!