ராமஜெயம் கொலை வழக்கு: 4 பேரிடம் விசாரணை
2022-09-27@ 17:09:51

திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், புதுக்கோட்டையை சேர்ந்த 2 பேர் உள்பட 4 பேரிடம் சிறப்பு தனிப்படை போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 29-3-2012ல் அதிகாலை நடைப்பயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தற்போது இந்த கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு தனிப்படை எஸ்பி ஜெயக்குமார் மற்றும் டிஎஸ்பி மதன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணேசன் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் உள்பட 4 பேரை நேற்றிரவு சிறப்பு தனிப்படை போலீசார் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பழைய காவல் நிலையத்தில் வைத்து டிஎஸ்பி மதன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் விடிய விடிய விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்றும் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
தருமபுரி அருகே பண்ணையில் மின்னல் தாக்கியதால் 5,000 கோழிகள் தீயில் கருகி நாசம்
ரூ.24.98 கோடி நிதி ஒதுக்கீடு: வைகை அணை-பேரணை இடையே பாசன கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்
கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்தின் புதிய வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கப்படுமா?: ஏலத்தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் எதிர்பார்ப்பு
காவல்துறையில் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்பி., ஆய்வு
பைக்காரா அணையின் கரையோரத்தில் இறந்து கிடந்த பெண் புலி
குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி