SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூன்றில் ஒரு பங்கு மூலதனத்தை இழந்த எல்.ஐ.சி: 34% சரிவை கண்டதால் ரூ.4 லட்சம் கோடியாக குறைவு

2022-09-27@ 11:17:11

மும்பை : எல்.ஐ.சி.யின் சந்தை மூலதன மதிப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழாக சரிந்தது. எல்.ஐ.சி ஊழியர்கள் பாலிசி தாரர்கள், அரசியல் கட்சிகளின் கடு ம் எதிர்ப்பையும் மீறி எல்.ஐ.சி. நடப்பாண்டு மே மாதம் 17-ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட நாள் முதல் பங்குசந்தையில் எல்.ஐ.சி.யின் பங்குகள் சரிவை மட்டுமே கண்டு வருகின்றன. தொடக்கத்தில் 949 ரூபாயாக இருந்த எல்.ஐ.சி.யின் பங்கு ஒன்றின் விலை தற்போது 629 ரூபாயாக வீழ்ந்துள்ளது.

5 மாதங்களில் 34 விழுக்காடு சரிவை கண்டிருப்பதால் எல்.ஐ.சி.யின் சந்தை மூலதன மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்க்கு கீழாக குறைந்து இருக்கிறது. சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மூலதன மதிப்பில் பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி. மூன்றில் ஒரு பங்கு மூலதன மதிப்பை இழந்து இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாலியலிடப்பட்ட போது பங்குச்சந்தையில் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் முதல் 5 இடத்திற்குள் இருந்த எல்.ஐ.சி. தற்போது 14-வது இடத்திற்கு தள்ளப்பட்டு பெரும் பின்னடைவை கண்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்