பிரபல கொள்ளையனிடம் 3 நாள் காவலில் விசாரணை: 15 சவரன் மீட்பு
2022-09-27@ 01:58:58

அண்ணாநகர்: வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவவிநாயகம் (41), பிரபல கொள்ளையன். இவர், மீது விருகம்பாக்கம் நொளம்பூர் உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 7க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குள் நிலுவையில் உள்ளன. விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய வழக்கில் கடந்த 4ம் தேதி, விருகம்பாக்கம் போலீசார், இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி அம்பத்தூர் நீதிமன்றத்தில் சிவ விநாயகத்தை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி பெற்றனர். அதன்படி விசாரணை நடத்தி, இவரது கூட்டாளிகள் யார், திருட்டு நகைகளை எங்கு விற்பார், கொள்ளையடிக்க திட்டமிடுவது எப்படி என விசாரணை நடத்தினர். மேலும், சிவ விநாயகம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 சவரன் நகையை மீட்டனர். பின்னர், அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
நிதிநிலை அறிக்கையில் ஊக்குவிக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் வேளாண்மை தொழில் புத்தாக்கம் பெறும்: தலைவர்கள் வரவேற்பு
ரூ.2.13 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் ராயபுரம் மாடிப்பூங்கா: விரைவில் திறக்க ஏற்பாடு
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சர்வதேச தரச்சான்று
கிண்டி மேம்பாலத்தில் விபத்து லாரியிலிருந்து டீசல் கசிந்து சாலையில் வழிந்தோடியது
மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
போரூர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!