வன்முறை, கலவரத்தை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடும் பாஜ தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் பேட்டி
2022-09-27@ 01:37:12

சென்னை: வன்முறை, கலவரத்தை தூண்டுவதுமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார். சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்தில் சில தினங்களாக கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்தன. தமிழகத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் சில சதிகார கும்பல்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
ஆனால், இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுடன் இஸ்லாமியர்களையும், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளையும் தொடர்புபடுத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக முதல்வரையும், காவல்துறையையும் வெளிப்படையாகவே மிரட்டுவதும், கருத்துச் சுதந்திரம் என்கிற பேரில் வன்முறை, கலவரத்தை தூண்டுவதுமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பாஜ தலைவர் அண்ணாமலை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றிய அரசின் அரசியல் பழிவாங்கும் கருவியான என்.ஐ.ஏ.வை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. தமிழகம் அமைதி பூங்காவாக தொடர்ந்து திகழ தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் எடுக்க வேண்டும். அதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவினையும் வழங்கும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயலாளர்கள் ரத்தினம், ஏ.கே.கரீம், மண்டல தலைவர்கள் முகமது ரஷீத், ராஜா உசேன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:
வன்முறை கலவரத்தை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடும் பாஜ தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்மேலும் செய்திகள்
அரசு பேருந்து மோதி மகன் கண் முன் தாய் பரிதாப பலி
கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து மை பூசி அழிப்பு: மர்ம நபருக்கு வலை
கோயம்பேட்டில் பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் ரகளை
துப்பு துலங்காத கொலைகளை கண்டறிய சிறப்பு துப்பறியும் காவல் படை: சென்னை கமிஷனர் அதிரடி
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு
மூத்த குடிமக்கள் வசதிக்காக வேளச்சேரி பேபி நகரில் ரேஷன் கடை: அசன் மவுலானா எம்எல்ஏ வலியுறுத்தல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!