SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

போலீஸ் நன்னடத்தை சான்று விவகாரம் பாஸ்போர்ட் பெற அஞ்சலக ஆன்லைனில் புதுவசதி

2022-09-27@ 01:04:46

சென்னை: ‘பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கு போலீசார் மூலம் வழங்கப்படும் நன்னடத்தை சான்றிதழ் எளிதில் கிடைக்கும் வகையில் அஞ்சலகங்கள் மூலம் விண்ணப்பிக்கும் புதிய முறையை’ ஒன்றிய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து ஒன்றிய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிக்கும் நபர்கள், போலீஸ் துறையில் இருந்து நன்னடத்தை சான்று பெற வேண்டும். இதனால் தேவையற்ற காலதாமதம், அவசியமற்ற விசாரணைகளை தவிர்க்க புதிய முறை பயன்தரும். அதன்படி, இந்த நன்னடத்தை சான்று பெறுவதற்காக நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த புதிய முறை 28ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது போலீசார் விசாரணை மற்றும் சான்றுகளுக்கு பிரத்யோக நேரம் ஒதுக்கப்பட்டு முன்னதாகவே நன்னடத்தை சான்று கிடைக்கும். அஞ்சலகங்களின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வசதி என்பது, இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை வாய்ப்பு பெறுவதற்காக மட்டும் அல்லாமல், இதர பணிகளுக்காக நன்னடத்தை சான்று தேவைப்படுவோருக்கும் உதவும். குறிப்பாக கல்வி, நீண்ட கால விசா பெறவும், வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதற்கான(இமிக்ரேஷன்) பணிகளுக்கும் உதவும்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்