SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

கோயில் எண்ணிக்கைக்கு ஏற்ப செயல் அலுவலர் பணியிடங்களை அதிகரிக்க அரசுக்கு கோரிக்கை

2022-09-27@ 01:01:27

சென்னை: கோயில் எண்ணிக்கைக்கு ஏற்ப செயல் அலுவலர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் 2 நாட்கள் நடந்தது. இதில் 400 செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக சுரேஷ்குமார், பொது செயலாளராக ஜெயப்பிரகாஷ் நாராயணன், மாநில பொருளாளராக எஸ். முத்துராஜ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில், உதவி ஆணையர் பதவி உயர்வில் 50 சதவீதம் செயல் அலுவலர்கள், 30 சதவீதம் அமைச்சு பணிளாளர்கள், 20 சதவீதம் நேரடி நியமனம் மூலம் செய்ய வேண்டும், செயல் அலுவலர் பணியிடத்திற்கு 2:2:1 என்பதற்கு பதில் 3:1:1 என மாற்ற வேண்டும், நிதி வசதி அற்ற கோயில்களில் கோயில் அலுவலகங்கள் கட்ட வேண்டும், வருமானத்திற்கு ஏற்ப கோயில்களின் நிலையை உயர்த்த வேண்டும், கோயில்களில் பணியாளர் தொகுதி அமைக்க வேண்டும், செயல் அலுவலர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்